புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் காணாமல்போன 22 வயது யுவதி சர்மிளாவுக்கு நடந்தது என்ன?

வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சர்மிளா என்ற யுவதி கடந்த 18.08.2025 முதல் காணாமல் போயுள்ளார்.
நெளுக்குளத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து வைத்தியசாலை சென்று வருவதாக கூறி சென்ற அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது தாயார் தெரிவிக்கின்றார்.
22 வயதுடைய இவ் யுவதி காணாமல் போன நேரத்தில் அவர் நீல நிற பிளாஷா மற்றும் கருப்பு நிறத்தில் வெள்ளை கோடு கொண்ட ரீசேட் அணிந்திருந்தார் எனவும் அவர் தொலைபேசி பாவிப்பதில்லை எனவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இவர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் 075-8446312, 0768446683 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

May be an image of ticket stub and textMay be an image of 1 person and smiling