புதினங்களின் சங்கமம்

யாழில் அரசியல்வாதி போர்வையில் செயற்பட்ட பயங்கரப் போதைப்பொருள் மாபியா சுலக்சன் கைது!!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிசார் பெருந்தொகை கஞ்சாவுடன் இருவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இன்று (11) மதியம் 2 மணியளவில் அறுகுவெளி பகுதியில் கஞ்சாவுடன் இருவரையும் பொலிசார் கைது செய்தனர். படகில் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்ட கஞ்சாவை பற்றைக்காட்டுக்குள் மறைத்து வைத்திருந்தபோது, பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அந்த பகுதியை சுற்றிவளைத்து இருவரையும் கைது செய்தனர். 126 பொதிகளில் கஞ்சாவும் மீட்கப்பட்டது. இது 200 கிலோகிராமுக்கு அதிகமான நிறையுடையதாக இருக்கலாமென கருதப்படுகிறது.மீட்கப்ட்ட கஞ்சாவின் நிறையை கணக்கிட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தில் சுலக்சன் என்ற வர்த்தகரும் கைதானான். இவன் சமூக செயற்பாட்டாளர் என கூறி வந்ததுடன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தான். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இவன் சுயேச்சைக்குழுவொன்றையும் களமிறக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவனுடன் சேர்ந்து முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பிரான விஜயகாந்தும் ஒட்டித்திரிந்தமை குறிப்பிடத்தக்கது. சுலக்சன் தனது போதைப்பொருள் வர்த்தகத்தை ஊடகவியலாளர்கள் அறியாது இருப்பதற்காக பல ஊடகவியலாளர்களுடன் நட்பு கொண்டாடி வந்ததுடன் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்ததாகவும் ஊடகத்தரப்பைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளர். அத்துடன் இவன் சமூகசேவைகள் என்ற போர்வையில் பலரு்ககு உதவி செய்து தன்னை பெரும் கொடை வள்ளல் என வெளிக்காட்டித் திரிந்துள்ளான்.

அதே வேளை டக்ளஸ் உட்பட்ட பல அரசியல்வாதிகளுடனும் இவன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கப்பிற்ல் எப்.எம் ஊடகத்தின் முதலாளியான அங்கஜனின் தம்பியும் குஸ்போதைப் பொருள் விற்பனை மாபியா என்பது குறிப்பிடத்தக்கது.

கைக்கோடாரி சின்ன வேட்பாளர் அறிமுகம் - Global Tamil Newsயாழில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் : உயர் நீதிமன்றத்தை நாடும் சுயேட்சை குழு - VidiyelMay be an image of ‎9 people and ‎text that says "‎யாழ் மாநகர சபைத் தேர்தல் வீணைக்கு வழங்கும் ஆணைை விடியலைத் தரும் 6TOBRT ••• 2025 賀員 ท 球 MEDIA परीक.शी ዓኔስቅ UNl வட்பாளர் ازهی ょ I சுர ரஞ்ஜன் 23‎"‎‎