புலம்பெயர்நாட்டல் எனது முதலாளிக்கு மூன்று திருமணம்.. எப்படி சாத்தியம்!!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்!!
முதல் திருமணத்தில் இரண்டு பிள்ளைகள்,
இரண்டாவது திருமணத்தில் 1 மகள்
இப்போதுள்ள 3 வது மனைவி கற்பமாக இருக்கிறார்..
முதல் இரண்டு மண முறிவுக்கும் காரணம், இவர் தனது மனைவியுடன் சேர்ந்து பிள்ளைகளை சரிபாதியாக கவனித்துக்கொள்வதில்லை, அதனால் வந்த பிரச்சனைகள் பெரிதாகி தான் மண முறிவு ஏற்பட்டதாக சொன்னார்..
இரண்டாவதாக மணம் முடித்தும் அதே காரணத்துக்காக மணமுறிவு..
அதாவது பிள்ளையை பார்ப்பதில்..
இப்ப திரும்பவும் காதல், கர்ப்பம்..
சரி நான் இப்ப சொல்ல வந்தது என்னவென்றால்..
இப்ப எல்லாம் Trending வயிற்றில் உள்ள பிள்ளை ஆணா, பெண்ணா என்று பார்ப்பதற்க்கு நீலம், Rose Ballons உடைப்பது..
அது இன்று பின்னேரம் நடந்தது, ஒரு சிறிய Function ஆக..
இந்த Function க்கு வந்தது மொத்தமே 17 நபர்கள் நான் உட்பட,
வந்தவர்கள் யார் என்றால்..
முதலாளியின் முதல் மனைவி அவரின் இரு பிள்ளைகள், முதல் மனைவியின் தற்போதைய கணவர், அவரின் முதல் திருமணத்தின் மூத்த மகள் ஒருவர்.
இரண்டாவது மனைவி, மகள், இரண்டாவது மனைவியின் இந்நாள் காதலன்.
தற்போது கற்பமாகவுள்ள மனைவியின், மூத்த திருமணத்தின் இரு பிள்ளைகள்…🤯🤯
நான் இப்படி ஒரு காட்சியை எங்கடை ஆக்களுக்குள்ள யோசிச்சுப் பார்த்தன்..🤣
இப்படி ஒரு சகிப்புத்தன்மை கொண்ட சமூகமாக, தமிழ் சமூகம் உருவாகுமா..??🤣🤣 #fblifestyle

