புதினங்களின் சங்கமம்

யாழ் மண்கும்மான் கடற்கரையில் ஜட்டியுன், பெனியனுடன் இனந்தெரியாத ஆணின் சடலம்!!

யாழ். மண்கும்பான் கடற்கரை பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

சடலம் ஒன்று மேற்படி கடற்பகுதியில் மிதப்பதாக கிராம மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை சடலத்தை பார்வையிட்டு மீட்டெடுத்தனர்.ஊர்காவல்துறை பொலிஸாரின் விசாரணைகளின் பின் சடலம் கடலில் இருந்து மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவல்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.