”சேர் ,ஸ்கூல் அதிபர் என்ர மனிசியோட படுத்திருந்ததை பார்த்தேன் சேர்” என கூறி நியாயம் கேட்கச் சென்ற ஊழியருக்கு வடக்கு கல்வி உயரதிகாரி கூறிய தீர்வு என்ன?
கிருசாந்தி கொலைச் சம்பவம் மற்றும் அதற்கு முன்னரும் பின்னருமான யாழ் கள நிலவரங்கள் தொடர்பாக தற்போது நாம் வம்பனின்புலனாய்வு தொடரை எழுதி வருகின்றோம். அதே போல பல புலனாய்வுத் தொடர்களை நாம் தொடர்ந்து எழுதுவுள்ளோம். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாண கல்விச் செயற்பாடுகள், கல்வி அதிகாரிகள், செயலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் நடத்தைகள், ஆளுமைகள் தொடர்பாகவும், கல்வி அதிகாரத்தரப்பினர்கள் பலரால் மேற்கொள்ளப்பட்ட துஸ்பிரயோகங்கள் தொடர்பாகவும் சுந்தரம் டிவகலா வடக்கு கிழக்கு கல்வி அமைச்சின் செயலாளராகம் கந்தசாமி பணிப்பாளராகவும் காணப்பட்ட காலத்தில் இருந்து எமது புலனாய்வுத் தொடரை இன்னும் ஓரிரு மாதங்களில் ஆரம்பிக்கவுள்ளோம்.
அதற்கு முன்னோடியாக கல்வித்துறை அதிகாரிகளின் ஆளுமை விருத்தி எந்த அளவுக்கு தராதரமானது என்பது தொடர்பாகவும் குறித்த அதிகாரிகள் எவ்வாறான அதிகார வன்மத்துடன் செயற்படுகின்றார்கள் என்பது தொடர்பாகவும் அவர்களது அதிகாரத் துஸ்பிரயோகங்கள் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் ஏனைய தரப்பினரை எவ்வாறு பாதிக்கின்றது என்பது தொடர்பாகவும் சிறிய கற்பனைக் கதை ஒன்றின் மூலமாக நாம் விளங்கப்படுத்துகின்ளோம்.
இது ஒரு கற்பனைக் கதையாகும்.
இலங்கை கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் பகுப்பாய்வுத் திறன் (Analytical skills) பரீட்சை ஒன்று வைக்கப்படப்டது. அந்தப் பரீட்சையில் ஒரு தகவல் வழங்கப்பட்டு அதற்கு எவ்வாறான தீர்வு காண்பீர்கள் என குறித்த கல்வி அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது.
அந்தத் தகவல் இதுதான்.
ஒரு பாடசாலை அதிபர் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள அவரது அலுவலக உதவியாளரின் வீட்டில் அவனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டுள்ளார். அதனால் அவர் பாடசாலையைக் கவனிக்காது உதவியாளரின் மனைவியுடன் அலுவலக உதவியாளரிடம் பிடிபடாமல் எவ்வாறு உறவு கொள்வது என்று சிந்திப்பதிலேயே காலத்தை கழிக்கின்றார். உதவியாளரை கல்வி திணைக்களத்திற்கு ஏதாவது வேலைகள் சொல்லி அனுப்பி விட்டு பாடசாலைக்கு அருகில் உள்ள அலுவலக உதவியாளரின் வீட்டுக்குச் சென்று மனைவியுடன் சல்லாபம் புரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவ்வாறு உதவியாளரை கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பிவிட்டு அவனது மனைவியுடன் அதிபர் சல்லாபம் புரிந்து கொண்டிருந்த போது அலுவலக உதவியாளரின் மோட்டார் சைக்கிள் இஞ்சின் கோளாறு ஏற்பட்டு பழுதடைந்துவிட்டது. அவன் கல்வித்திணைக்களத்திற்கு செல்லாமல் மோட்டார் சைக்கிளை உருட்டிக் கொண்டு பாடசாலைக்கு உடனடியாகத் திரும்பி வந்துவிட்டான். பாடசாலை அதிபரின் அறையில் அதிபரைக் காணததால் மோட்டார் சைக்கிள் உருட்டிய களைப்பில் இருந்த அவன் அருகில் இருந்த தனது வீட்டுக்கு சென்று மனைவியிடம் தேனீர் வாங்கி குடிக்கும் நோக்கில் போன போது அங்கு மனைவி தனது அதிபருடன் அந்தரங்கத் தொடர்பில் இருந்ததைக் கண்டான். இதனால் கோபமடைந்த அவன் அதிபரைத் தாக்கிய பின் கல்வி அதிகாரியான உங்களிடம் முறைப்பாடு செய்துள்ளான். இதற்கு நீங்கள் எவ்வாறான நடவடிக்கை எடுப்பீர்கள் என இலங்கைக் கல்வி அதிகாரிகளிடம் குறித்த தகவலைக் கொடுத்து பகுப்பாய்வுத் திறன் வினா கேட்கப்பட்டது…..
நம்ம வடக்கு மாகாண கல்வி உயர் அதிகாரி எழுதிய விடை கீழே தரப்பட்டுள்ளது.
அதிபர் அவனை கல்வித்திணைக்களத்திற்கு அனுப்பிய போது அவன் அங்கு செல்லாமல் விட்டதற்கு காரணம் அவனது மோட்டார் சைக்கிளே… ஆகவே அவனது மோட்டார் சைக்கிளை சரியான முறையில் பராமரிப்பதற்கான ஆலோசனையைக் கூறுவதுடன் ஏனைய பாடசாலைகளில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கும் மோட்டர் சைக்கிள் பராமரிப்பு பயிற்சி நெறிக்காக மாகாண கல்வி அமைச்சின் நிதியிலிருந்து செமினார் ஒன்றை ஒழுங்கு செய்து வளவாளர்களாக கோட்டக்கல்வி, வலயக்கல்வி அதிகாரிகளையும் நியமித்து அவர்களுக்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்…..

