யாழில் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை காவாலிகளிடம் அன்றே பறிகொடுத்த இளைஞன்!!
கடையில் இருந்து புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிள் சில மணி நேரத்திலேயே மர்மக்
கும்பலினால் பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் இணுவில் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் யாழ்ப்பணத்தில் உள்ள ஓர் மோட்டார் சைக்கிள் விற்பனை
நிலையத்தில் நேற்று 2 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்றை
வாங்கியுள்ளார்.
புதிதாக வாங்கிய வாகனத்திற்கு ஆலயத்திற்கு கொண்டு சென்று பூஜை வழிபாட்டில்
ஈடுபட்டுள்ளார். பின்னர் தனது உறவினர் வீட்டுக்கு மாலை சென்றுள்ளார்.
உறவினர் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போது மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர்
கொண்ட மர்மக் கும்பல் குறித்த இளைஞனை சரமாரியாக தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளையும்
பறித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இன்றையதினம்
முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.

