யாழ் நெல்லியடி சந்தையில் பெரும்பான்மையினர் ஒருவரின் அடாவடி !! பொலிசார் கொடுத்த பதிலடி!!
12.11.2020 நேற்று நெல்லியடி புதிய சந்தை பகுதிக்குள் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் சந்தைக்குள் வரிப்பணம் பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது வெளி இடங்களில் இருந்து சந்தைக்கு வாகனத்தில் மரக்கறி கொண்டு வந்த ஒருவர் வாகனத்துக்கும் கொண்டுவந்த பொருட்களுக்கும் வரி கொடுக்க மாட்டேன் என்று கூறியதுடன் வரிப்பணம் பெற்றுக்கொண்டிருந்த உத்தியோகத்தருக்கு அடிப்பதற்கு கையை ஓங்கியுள்ளார். உடனடியாக சந்தை வெளிப்பகுதி கேட் பூட்டப்பட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. நெல்லியடி பொலிசார் உடனடியாக சந்தைப் பகுதிக்கு வருகை தந்துவாகன சாரதியை உடனடியாக கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை செய்தார்கள். அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் நிமித்தம் வரிப் பணமும் வாங்கிக் கொடுக்கப்பட்டு வரிப்பணம் கேட்ட உத்தியோகத்தர் இடம் மன்னிப்பும் கேட்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இவர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

