புதினங்களின் சங்கமம்

யாழில் நிறை வெறியில் மாத சொரூபத்தை அடித்து உடைத்த NPP கட்சிக் காவாலி மயூரன் உட்பட்டவர்களை சிறையில் அடைக்க உத்தரவு!!

மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் சுருவத்தை மதுபோதையில் உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 8 சந்தேக நபர்களையும் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்பதாக மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் சுருவத்தை 20 பேர் கொண்ட குழு ஒன்று கடந்த 25 ஆம் திகதியன்று நிறை போதையில் உடைத்து சேதப்படுத்தியதாக குறித்த ஆலய நிர்வாகத்தினரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் NPP என்னும் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உள்ளடங்கலாக 8 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். எஞ்சியோர் தப்பிச்சென்றிருந்த நிலையில் பொலிஸார் அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட 8 பேரையும் விசாரணை செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் வகையில் நேற்றையதினம் ( 27) ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இதன்போது ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் குறித்த 8 நபர்களையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

முன்பதாக தனிமைத் தீவாக இருக்கும் குறித்த ஆலய சூழலில் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உள்ளடங்கலாக 20 பேர் அடங்கிய குழுவினர் மதுபான விருந்தொன்றை முன்னெடுத்திருந்த நிலையில் ஆலயத்திற்கு சுற்றுலா சென்றவர்களுடன் முரண்பட்டுக்கொண்ட காட்சிகளில் அதிகளவான மதுபான போத்தல்கள், ஆடு ஒன்றின் தலை உள்ளிட்ட பல்வேறு தடயங்களும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.