புதினங்களின் சங்கமம்

யாழில் அலங்கோலமான சாப்பாட்டுக்கடைகள்!! ஆளுநர் பாய்ச்சல்!! (Photos)இந்த இலக்கத்துக்கு அறிவியுங்கள்!!

யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் செயலணி என்பன இணைந்து உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது நேற்று திடீர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர். இந்தச் சோதனை நடவடிக்கையின் போது 15 உணவகங்கள் சுகாதாரச் சீர்கேடுகளுடன் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் 9 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 4 மருந்தகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 2 மருந்தகங்களில் தகுதியற்ற மருந்து வழங்குனர்கள் சேவையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில்
உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் செயலணி என்பன
இணைந்து உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது நேற்று திடீர் கண்காணிப்பு
விஜயத்தை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனை நடவடிக்கையின் போது 15 உணவகங்கள் சுகாதாரச் சீர்கேடுகளுடன்
இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் 9 உணவகங்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

4 மருந்தகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 2
மருந்தகங்களில் தகுதியற்ற மருந்து வழங்குனர்கள் சேவையில் இருந்தமை
கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின்
அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாணத்தின் அனைத்து பிரதேசங்களிலும் இந்த சோதனை
நடவடிக்கள் தொடரும். தகுதியற்ற உணவங்கள் காணப்படின் மக்கள் ஆளுநர்
அலுவலகத்தின் 021 221 9375 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Image may contain: one or more people, food and indoorImage may contain: foodImage may contain: foodImage may contain: drinkImage may contain: foodImage may contain: foodNo photo description available.