புதினங்களின் சங்கமம்

அர்சுனா எந்த வேளையிலும் கைததாகி சிறையில் அடைக்கப்படலாம்!! ஆயத்தமாகின்றது அரச இயந்திரம்!!

சமூகவலைத்தளங்களில் அரசாங்கத்திற்கு எதிராகவும் கருத்துக்கள் சொல்லத் தொடங்கியுள்ள யாழ் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலை முன்னாள் பொறுப்பதிகாரியை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு இலங்கை அரச இயந்திரம் ஆயத்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எவ்வேளையும் அர்ச்சுனா கைது செய்யப்படலாம் என கொழும்பில் உள்ள அரசசார்பு முக்கிய ஊடகச் செயற்பாட்டாளர் ஒருவர் தனது நண்பர்களின் வட்சப் குழுவில் பதிவிட்டுள்ளார்.

மிகவும் நேர்மையான செயற்பாட்டால் தமிழ் மக்களிடம் ஒரு சில நாட்களில் பிரபலமடைந்த அர்ச்சுனாவின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அர்ச்சுனா தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகள் ஒருமித்த ஆதரவைக் கொடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த முற்பட வேண்டும் என அர்ச்சுனாவுக்கு நெருங்கிய தரப்புக்கள் தகவல்களை வெளியிட்டுள்ளார்கள். அர்ச்சுனா கைதாகினால் அவருக்கு ஆதரவான செயற்பாட்டை தமிழ் அரசியல்வாதிகள் எடுக்காவிடின் அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு கணிசமான அளவு குறைவடையும் என்பது வெளிப்படை உண்மை.