யாழில் அதிவேகம்!! வயலுக்குள் பாய்ந்து தலைகீழாக புரண்ட தனியார் பேரூந்து!! வீடியோ
சற்றுமுன் தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 789 வழித்தட பேருந்து ஒன்று வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
குறித்த பேருந்தானது யாழில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இருக்கும் வயலுக்குள் பாய்ந்துள்ளது.
அதி வேகமாகச் சென்ற குறித்த பேருந்து வலது புறமாக வீதிக்கு மாறிச் சென்று வயலில் விழுந்தது. இருப்பினும் பயணிகள் எவருக்கும் எந்தவிதமான உயிராபத்தும் ஏற்படவில்லை.வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





