திருடுவது தப்பு என செயலமர்வு வைத்த யாழ்ப்பாணத்தின் மிகப் பெரிய பச்சைக் கள்ளன்!!!
யாழ்ப்பாணத்தில் 2010 ம் ஆண்டு தொடக்கம் குளோபல் லைவ் லங்கா என்ற பிரமிட் மோசடி நிறுவனத்தின் முக்கிய புள்ளியாக இருந்து தனக்கு கீழ் வேலை செய்த அப்பாவி அரச ஊழியா்களையும் அதில் சேர்த்து மிகப் பாரிய நிதி மோசடி செய்த தற்போதய அரச அதிபரான பச்சைக் கள்ளன் பிரதீபன் தற்போது பிரமிட் திட்டங்களின் பரவலைத் தடுக்க யாழில். விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றமை குறித்த நிறுவனத்தில் பணத்தை முதலிட்டு அழிந்து போயுள்ள பலரையும் பெரும் விசனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
1998ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து கல்வித்திணைக்களத்தின் களஞ்சியக்காப்பாளராக கடமையாற்றி பெரும் நிதி மோசடி செய்து,2000 ம் ஆண்டு காலப்பகுதியில் புலிகள் அரியாலைப் பகுதியைக் கைப்பற்றிய போது அரியாலை சிறிபார்வதி வித்தியாசாலையில் காணப்பட்ட கணனிகளில் பலவற்றை களவெடுத்து தனது வீட்டில் வைத்ததிலிருந்து மிகப் பெரும் ஊழல் மற்றும் மோசடிகள் புரிந்து வந்த பிரதீபன் 2010ம் ஆண்டு தொடங்கி கோப்பாய் பிரதேசசெயலக ஊழியர்களிலிருந்து பிரமிட் நிறுவனத்திற்கு ஆட்களைச் சேர்த்து பெரும் பண மோசடி செய்தான்.
எந்த அரசியல்வாதி யாழ்ப்பாணத்தில் அதிகாரத்துக்கு வந்தாலும் அந்த அரசியல்வாதியின் கு..டியைக் கழுவியாவது தனது பதவியை தக்க வைத்துக் கொண்டிருந்தவன் தற்போதைய மடைச்சாம்பிராணியான விசுக்கோத்து மீன்பிடி அமைச்சரின் மகனுக்கும் கார் வாங்குவதற்காக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தனது அரச அதிபர் பதவியை உறுதிப்படுத்திய பின் தற்போது சைவப் பூனை போல் செயற்பட்டு வருகின்றான்.
அங்கஜன், டக்ளஸ், தற்போதய மடைச்சாம்பிராணி சந்திரசேகர் போன்றவர்களை எவ்வாறு வழிக்கு கொண்டு வந்து செயற்படுகின்றான் என்பது தொடர்பாக விரிவான தகவல்களை விரைவில் வழங்குவோம்.
பிரதீபன் தற்போது செயலக மகாநாட்டு மண்டபத்தில் வைத்த செயலமர்வின் செய்தி கீழே தரப்பட்டுள்ளது.
பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவதனால் ஏற்படும் பாதகமான பொருளாதார விளைவுகள் மற்றும் பிரமிட் திட்டங்களின் பரவலைத் தடுக்க அத்தகைய திட்டங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்த தேசிய விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் யாழ். மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, தலைமையுரை ஆற்றிய மாவட்ட செயலர்,
ஜனாதிபதி செயலகம் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரமாக யூலை 14 தொடக்கம் 18 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இவ் தேசிய விழிப்புணர்வு வாரத்தில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை ஒருங்கிணைத்து பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவதனால் ஏற்படும் பாதகமான பொருளாதார விளைவுகள் மற்றும் பிரமிட் திட்டங்களின் பரவலைத் தடுக்க அத்தகைய திட்டங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இவ் விழிப்புணர்வு நிகழ்வின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலக சிரேஷ்ட முகாமையாளர் கே. தர்மேந்திரா கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சிவகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)பா. ஜெயகரன், உதவி மாவட்ட செயலாளர் உ.தா்சினி மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

