புதினங்களின் சங்கமம்

களுத்துறை வைத்தியசாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட குழப்பம்: அவசரமாக வெளியேற்றப்பட்ட நோயாளிகள்!!

களுத்துறை தாய் மற்றும் சிறுவர் வைத்தியசாலையில் திடீரென தீ எச்சரிக்கை கருவி இயங்கியமையினால் வைத்தியசாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு (13) இடம்பெற்ற இந்த சம்பவம் காரணமாக வைத்தியசாலை ஊழியர்களும், நோயாளர்களும் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தீ எச்சரிக்கை மணி ஒலித்ததையடுத்து, களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினரை உடனடியாக வரவழைத்து பாதுகாப்புப்படையினரும், வைத்தியசாலை ஊழியர்களும் இணைந்து வைத்தியசாலை கட்டடத்தில் இருந்து நோயாளிகளை வெளியேற்றியுள்ளனர்.