புதினங்களின் சங்கமம்

யாழில் கந்துவட்டி காவலிகளால் கடத்திச் செல்லப்பட்டு நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து கடும் சித்திரவதை!! 4 பேருக்கு சிறை!!

யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

குடும்பஸ்தர் ஒருவருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த நபர் ஒருவர், பணத்தினை பெற்றவர் மீள கொடுக்க தவறியமையால் மேலும் மூவருடன் இணைந்து , பணம் பெற்றவரை இளவாலை பகுதிக்கு கடத்தி சென்று , நிர்வாணமாக்கி , அவரை மோசமாக தாக்கி ,சித்திரவதைகள் புரிந்து அதனை தமது திறன்பேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர்.

பின்னர் பணம் பெற்றவரை மிரட்டி விடுவித்த நிலையில், அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ,குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி சென்றமை , தாக்கியமை , சித்திரவதை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் உள்ளிட்ட நால்வரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்

விசாரணைகளின் பின்னர் நால்வரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை , சித்திரவதை மற்றும் தாக்குதலைகளை காணொளியாக பதிவு செய்த திறன் பேசிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவர் கடந்த வருடம் , தன்னிடம் பணம் பெற்று , அவற்றினை திருப்பு செலுத்த தவறியவர்களை கடத்தி சென்று தோட்ட வெளி ஒன்றில் நிர்வாணமாக்கி தாக்கி , சித்திரவதைகள் புரிந்து அவற்றை தனது தொலைபேசியில் காணொளியாக பதிவேற்றி வைத்துள்ளார்.

அவற்றில் சில காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக பொலிஸார் குறித்த கந்து வட்டி கும்பலை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையிலையே தற்போதும் அதே பாணியில் வட்டி பணம் வாங்க முற்பட்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஏற்கனவே செயற்படும் கந்துவட்டிக்காவாலிகள் சிலரின் புகைப்படங்கள் தந்துள்ளோம்… 

இவர்தான் யாழ்ப்பாணம் மருதனார்மடம் வசூல் ராஜா கந்துவட்டி ஜெகன்!!!
No photo description available.
சாதாரண கோயில் காணியில் வசித்து வந்த கந்தையா கைலாயம் எனும் மருதனார்மட ஜெகன் அவரது மருமகன்களான யோகரசா சயந்தன், முத்து ஆகியோருடன் இணைந்து வட்டிக்கு பணம் வசூலித்து இன்று எத்தனையோ அப்பாவி மக்களது வீடுகளை அறுதியாக்கி உள்ளார்கள், அத்துடன் இவர் பல பெ,ண்களை மிரட்டி தவறு செய்யவும் அழைத்துள்ளார்.
No photo description available.
பல கோடிகளை வட்டிக்கு விட்டு உள்ளார்கள் எத்தனையோ வாகனங்கள் அடித்துப்பறித்து வைத்து உள்ளார்கள், இவை அனைத்தும் பொதுமக்களை அடித்து வாங்கிய பணம், இவர்களிடம் கேள்வி கேட்டால் சுன்னாக பொலிசார் பொய் வழக்குகள் போட்டு உள்ளே அனுப்பி விடுவார்கள் என்று மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்,
No photo description available.
பிரதேசசபை அதற்கு மேல் அவர்களிடம் காசை வாங்கி வட்டி தொழில் செய்ய கடைகளை வழங்கி உள்ளனர், சாதாரண மக்களால் என்ன தான் செய்ய முடியும் இதற்கு அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுத்து இவர்களது சொத்துகளை பறிமுதல் செய்வது மட்டும் இன்றி இவர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்,
படங்களில் உள்ளவர்கள் வட்டி ஜெகன் மற்றும் கந்துவட்டி வசூல் கும்பல்கள், மதியம் வெளியான வீடியோவில் அப்பாவியைத் தாக்குவது இவர்கள்தான்.
No photo description available.No photo description available.