யாழில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு; சந்தேக நபர் தப்பியோட்டம்..!
யாழ்ப்பாணம் – வடமராட்சிக் கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் நேற்று (7) திங்கட்கிழமை இரவு 10:30 மணியளவில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று இரவு முல்லைத்தீவு விசேட அதிரடிப் படையினரால் ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்று செம்பியன் பற்று தெற்குப் பகுதி முழுவதும் மேற்கொள்ளபட்டது.
இச் சுற்றிவளைப்பில் 8 பொதிகள் அடங்கிய 15.795 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். மீட்கப்பட்ட கேரள கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

