கிளிநொச்சி கல்வித் திணைக்களத்தில் பண மோசடி செய்து 2 வது மனைவியின் கணக்கில் வைப்புச் செய்த துணுக்காய் பிரதேசசபைச் செயலாளர் மகாதேவன்!!
கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமணையில் கணக்காளரின் போலிக் கையொப்பத்தை இட்டு ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபா காசோலை மோசடி செய்து அந்தக் காசோலையை தனது 2 வது மனைவியின் கணக்கில் வைப்புச் செய்துள்ளான் தற்போதைய துணுக்காய் பிரதேசசபைச் செயலாளரான மகாதேவன். மகாதேவன் கிளிநொச்சி கல்விப்பணிமனையில் நிதி உதவியாளராகக் (FA) கடமையாற்றிய போதே இவ்வாறான மோசடியைச் செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. தற்போது துணுக்காய் பிரதேசசபையின் செயலாளராக பதவியேற்றுள்ள இவனை எவ்வாறு இந்தப் பதவியில் நியமித்தார்கள் என பலரும் கடும் விசனத்தைத் தெரிவித்துள்ளார்கள்.
இவன் ஏற்கனவே பளை பிரதேசசபையில் பணியாற்றிய போதும் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதாகக் கூறி 3 லட்சம் பணம் லஞ்சம் வாங்கியிருந்தான். மகிந்த ஆட்சியில் மகிந்தவின் மகன் நாமலுடன் செல்பி எடுத்து வைத்திருந்ததுடன் நாமலின் நண்பன் என்ற ரீதியில் செயற்பட்டு பல்வேறுபட்ட ஊழல்களைப் புரிந்து வந்துள்ளான். தற்போதய ஊழல் அற்ற அரசு என கூறிக் கொண்டு செயற்படும் NPP அரசாங்கத்தின் ஆளுநராகவுள்ள நேர்மையான அரச அதிகாரி எனப் பெயர் எடுத்த தற்போதைய வடக்கு ஆளுநர் இவனை எவ்வாறு பிரதேசசபை செயலாளராக நியமித்தார் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

