ஒரு யாழ்ப்பாணப் பெடியனின் செயற்பாடு!! நடந்தது என்ன?
முயற்சிக்கு பெயர் போனவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் தான். தன்னுடைய குடும்பம் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அதுவே சுயநலமாக மாறிப்போனது வேறகதை.
ஆனால் பரப்புக்கணக்கான காணிக்குள்ள அவர்களின் முயற்சி அபரிமிதமானது.
தனது பிள்ளைகளை மிகவுயர்ந்த நிலைக்கு கொண்டுவருவதில் அவர்களின் உழைப்பே காரணம்.
இடமில்லாத போதும் பசுக்களை வளர்த்து பால் விற்று வருமானம் எடுக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உண்டு. பணம் இருந்தாலும் கைவிடாத தொழிலில் இதுவும் ஒன்று.
மகன், மகள் வெளிநாடு என்றாலும் அதற்கு மேல் அவர்களின் முயற்சியை நேராக பார்த்திருக்கிறேன். உழைத்து வாழ வேண்டும் என்ற வைராக்கியம் தான் அவர்களை உயர்த்துகின்றது.
அரச உத்தியோகம் என்றாலும் மரக்கறியை , பாலை சந்தைக்கு கொடுத்துவிட்டே வேலைக்கு போகும் பலர் உள்ளனர்.
இந்த பையனை பார்த்த போது ஒரு மரியாதை வருகின்றது. பெற்றோரின் வளர்ப்பு சரியாகவுள்ளது. அவனின் முன்னேற்றம் சரியாகவுள்ளது. களவுக்கும் பொய்யுக்குமே ஒரு மனிதன் வெட்கப்பட வேண்டும். நேர்மையான உழைப்புக்கு எவரிடமும் கைகட்ட தேவையில்லை.
அண்மையில் கூட எனது நண்பன் ஒரு தொகை பணம் அனுப்பி, கஸ்ரப்படுகின்ற மக்களுக்கு சாமான் வாங்கி கொடுக்க சொன்னான். நான் வாங்கி கொடுக்கவில்லை. அந்தபணத்தை பத்திரமாக வைத்திருக்கின்றேன்.
மீனை கொடுப்பதை விட தூண்டிலை வாங்கி கொடுக்கலாம் என்பது எனது சிந்தனை.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவனுக்கு மட்டுமல்ல இப்படி ஆர்வமுடைய ஒருவனுக்கும் உதவி செய்வதில் தவறில்லை.
முயற்சிப்பவனை தான் முன்னேற்ற முடியும். நாம் செய்யும் உதவிக்கும் பலனை அனுபவிக்க முடியும்.
நன்றி
Vaiththilingam Rajanikanthan

