துரோகியே வெளியேறு – செம்மணியில் இருந்து சிவஞானம் விரட்டியடிக்கப்பட்ட காட்சி.! Video
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்றையதினம் செம்மணியில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்றவேளை அங்கிருந்த போராட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்டார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா விளக்கு போராட்டமானது கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இன்று வரை நடைபெற்று வருகிறது.
குறித்த போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சென்றவேளை அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் அவரை ஒருமையில் விழித்து கூச்சலிட்டு அந்தப் பகுதியில் இருந்து அவரை விரட்டியடித்தனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.
உள்நாட்டு போர்க் காலங்களில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழின அழிப்பிற்கு துணை போன ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளுடன் சேர்ந்துகொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களால் அவர் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.