புதினங்களின் சங்கமம்

யாழில் குளித்த அன்ரியை மரத்தில் ஏறி ரசித்த மாணவன் மீது தாக்குதல்!!சாதி ரீதியாக தர்க்கம்!! மாணவனின் தந்தை பொலிசில் புகார்!!

வீட்டுக் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவரை மாமரம் ஒன்றில் ஏறி ரசித்துக் கொண்டிருந்ததாக கூறி, யாழ் நகர்ப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 17 வயதான மாணவன் அப்பகுதியில் நின்றவர்களால் தாக்கப்பட்டுள்ளான். யாழ் வலிகாமம் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. மாணவன் தான் செய்தது தவறு என கூறிய பின்னா் மாணவனை பொலிசில் ஒப்படைக்காது அப்பகுதியில் உள்ளவர்கள் விடுவித்துள்ளார்கள். அதன் பின்னர் மாணவன் வீட்டுக்குச் செல்லாது தனது நண்பனின் வீடு ஒன்றிற்கு சென்றுள்ளான். முகம் வீங்கிய நிலையிலும் முழம் கால்களுக்கு கீழ் தடியால் அடித்த காயங்களுடனும் நண்பன் நின்றதால் அது எதனால் ஏற்பட்டது என கூறியும் அவன் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து நண்பனின் பெற்றோர் அவனது குடும்பத்தவர்களுக்கு தகவலை வழங்கியுள்ளனர். அங்கு வந்து பிள்ளையின் நிலையினைப் பார்த்த தாய் அவனிடம் விளக்கம் கேட்ட போதும் அவன் எதுவும் சொல்லாது நின்றுள்ளான். அதன் பின்னர் அங்கு வந்த தந்தை அவனை அச்சுறுத்தி கேட்ட போது தன்னை குறித்த இடம் ஒன்றில் நின்றவர்கள் தாக்கியதாகவும் மரத்தில் மாங்காய் பறிக்க ஏறிய போதே அவர்கள் தாக்கியதாகவும் கூறியுள்ளான்.

இதனையடுத்து அங்கு பெரும் அல்லோலகம் ஏற்பட்டுள்ளது. தாக்கியவர்களை திருப்பி தாக்குவதற்கு தந்தை மற்றும் மாணவனின் உறவுகள், அயலவர்கள் அங்கு விரைந்துள்ளனர். பெருமளவானவர்கள் தமது ஏரியாவுக்கு வருவதைக் கண்ட இளைஞர்கள் அங்கு திரண்டனர். இதன் பின்னர் குறித்த மாணவனுக்கு தாம் எதற்காக அடித்தோம் என விளக்கம் கொடுக்கப்பட்டதுடன் மாணவன் மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்றையும் மாணவனின் தந்தை மற்றும் உறவுகளுக்கு காட்டியுள்ளார்கள். ஆனாலும் மாணவனுக்கு இவ்வாறு அடித்தது தப்பு என கூறி மாணவனை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று முறையிட்டுள்ளார்கள்.

அத்துடன் தாம் ஒடுக்கப்பட்ட சாதியினர் என்றும் தனது மகன் உயர்சாதியினரின் மாமரத்தில் ஏறியதால் அவர்கள் தமது மகனை தாக்கிய பின் மாணவன் குளிப்பதை பார்த்ததாக அச்சுறுத்தி மாணவனை மன்னிப்பு கேட்கச் செய்ததாகவே மாணவனின் பெற்றோர் பொலிசாருக்கு முறையிட்டுள்ளர்.

பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போது, மாணவன் மரத்தில் ஏறி அயல் வீட்டை நோட்டம் இட்டுக் கொண்டிருந்த சிசிரீவி காட்சிகள் மற்றும் மாணவன் தான் எதற்காக மரத்தில் ஏறினேன் என கூறி மன்னிப்பு கேட்கும் காட்சிகளும் பொலிசாருக்கு காட்டப்பட்டன. சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற பொலிசார் மாணவன் மரத்தில் ஏறிய இடத்திலிருந்து அவன் நோட்டமிட்ட இடம் கிணற்றுப் பகுதி என்பதை அறிந்தும் மாணவன் ஏறிய மாமரம் எந்தவித காய்களும் அற்ற மரம் என்பதையும் அவதானித்து மாணவனிடத்தில் இது தொடர்பாக கேட்ட போது மாணவன் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளான். இதனையடுத்து தாக்கியவர்களுக்கு எதிராக ஒரு முறைப்பாடும் மாணவன் மரத்தில் ஏறி பெண் குளிப்பதை பார்த்தமைக்கு எதிராக இன்னொரு முறைப்பாடும் பதியப்படும் என பொலிசார் இருதரப்புக்கும் கூறியதாகத் தெரியவருகின்றது.

அத்துடன் சாதி ரீதியாக தேவையில்லாமல் பிரச்சனையை வளர்க்க முற்பட்டதாக கூறி மாணவன் தரப்பினரை பொலிசார் கடுமையாக எச்சரித்துள்ளதாக பொலிஸ்தரப்பினுாடாக அறியமுடிகின்றது.