சாவகச்சேரி தனங்களப்பில் மிகப் பெரும் மண் கடத்தல் மாபியாக்கள்…… பொலிசாரும் உடந்தையா? வீடியோ
சமூகவலைத்தளம் ஒன்றில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…
சாவகச்சேரி தனங்களப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மணற்கடத்தல் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. மணற்கடத்தல் மட்டுமல்லாது அப்பகுதியில் கொண்டு வந்து இறக்கப்படும் கஞ்சாப் பொதிகளையும் பல்வேறு இடங்களுக்கு பகிர்ந்து செல்லும் இடமாக தனங்களப்பு பகுதி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
குறித்த பகுதியில் வாழும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரே இந்த மணற்கடத்தல் தொழிலின் முக்கிய புள்ளிகளாக உள்ளதாக தெரியவருகின்றது. இவர்களுடன் சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பலர் மணல் கடத்தி வருவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
பொலிசார் பல தடவைகளை இவர்களைப் பிடித்தும் இவர்களது மண் கடத்தும் உழவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தாலும் இவர்கள் தொடர்ச்சியாக மணல் கடத்தி வருகின்றார்கள். இவர்களுக்கு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஒரு சில பொலிசாரும் உடந்தையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள்.
கடந்த சனிக்கிழமை 14.06.2025 அன்று தனங்களப்பு கடற்கரைப் பகுதியில் இவர்கள் NC RA என்ற உழவு இயந்திரத்துடன் பெட்டி நம்பர் (NP457868) பிடிக்கபடப்டார்கள். தனமோகன் கிரிதரன் என்பவனுடன் பிடிபட்ட மகிழராசா தேனுசன் மற்றும் புலவர் லோசன் ஆகியோரை பிடித்த பொலிசார் 50 ஆயிரம் ரூபா வாங்கிய பின் விட்டுவிட்டார்கள் என்றும் தனமோகன் கிரிதரனை மட்டுமே பிடித்துச் சென்றார்கள் என்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். உழவு இயந்திரத்தின் பெட்டி (NP457868) அப்பகுதியைச் சேர்ந்த நிசாந்தன் என்பவனுடையது எனத் தெரியவருகின்றது.

















