புதினங்களின் சங்கமம்

சுண்டுக்குளி மகளீர் கல்லுாரி மாணவி ஞானந்தி திட்டமிட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டாரா? வம்பனின் புலனாய்வுத் தொடர் 3

1996ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குளி மகளீர் கல்லுாரி மாணவி கிருசாந்தி படையினரால் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, கிருசாந்தி கொலைக்கு முன்னரும், கிருசாந்தி கொலைக்குப் பின்னரும் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக செம்மணி மற்றும் அரியாலைப் பகுதிகளில் நடந்த சம்பவங்கள் சிலவற்றை நாம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். அதன் 3 வது பகுதி இங்கு தரப்பட்டுள்ளது.

இரண்டாம் பகுதி பகுதி கீழே

யாழில் கை,கால், வாய் கட்டப்பட்டு கட்டடத்துக்குள் நிர்வாணமாக கிடந்த யுவதிகள்!! பத்தினியம்மா பதுங்கியது ஏன்? வம்பனின் புலனாய்வுத் தொடர் 2

சிங்கள இனம், இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள வங்கதேசம் மற்றும் ஒரிசாவை அண்டிய பகுதியைச் சேர்ந்தவர்களால் உருவான இனம் என கூறப்படுகின்றது. கி.மு முன்னரரான காலத்தில் அஙகுள்ள அரசனான சிங்கபாகு என்பவனால் அவனது மூத்தமகனான விஜயனுடன் சேர்த்து கப்பலில் ஏற்றி நாடுகடத்தப்பட்ட 700 தோழர்களுடன் இலங்கையில் கப்பல் தரை தட்டிய பின் அங்கேயே குடியேறியவர்களால் உருவான இனம் சிங்கள இனம் என வரலாறுகள் கூறுகின்றன.  விஜயனும் அவனது தோழர்களின் மிகக் கொடூரமான செயற்பாடுகளாலேயே அவர்கள் அந்த பிராந்தியத்திலிருந்து துரத்தப்பட்டார்கள்.

 தற்போதும் ஒரிசா மற்றும் வங்கதேசங்களில் நடக்கும் குடும்பச் சண்டைகள் மற்றும் குழுச் சண்டைகளின் போதும் எதிரியை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடாத்துவது குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் பழக்கவழக்கமாகும். அந்த பிரதேசத்தைச் சேர்ந்த முன்னோர்களின் ஒருவரான  அர்ச்சுன தாசர் என்ற அறிஞர் எழுதிய காவியத்தில், அக்காலத்தில் நடந்த அரச போர்களின் போதும் குறித்த பிரதேசதைச் சேர்ந்த அரசர்கள், வீரர்கள் எதிரியை பிடித்தால் அவனை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து கொல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்..

இதை இங்கு ஏன் சுட்டிக் காட்டிக் குறிப்பிடுகின்றோம்?

சிங்களவனின் பிறவிக் குணம் மாறுமா? 1995ம் ஆண்டு மணலாறு இராணுவமுகாம் தாக்குதலில் பலியாகிய பல பெண் போராளிகளின் சடலங்கள் சர்வதேசசெஞசிலுவைச் சங்கம மூலம் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அந்தச் சடலங்களில்  இறந்த பின்னரும் இராணுவம் செய்திருந்த மிகக் கேவலமான, கொடூர செயற்பாடுகள் போராளிகள் பலரும் அறிந்திருப்பர்.  முள்ளிவாய்க்காலில் பாரிய கிடங்குக்குள்  இசைப்பிரியா தொடங்கி முக்கிய தளபதிகளை நிர்வாணமாக்கி கொலை செய்த காட்சிகள் தற்போதும் சமூகவலைத்தளங்களின் உலாவருகின்றன. அத்துடன் கோத்தபாயாவுக்கு எதிரான போராட்டத்தில் கூட தனது இனத்தைச் சேர்ந்தவர்களையே நிர்வாணமாக்கி அடித்து உதைத்தது தொடக்கம் பட்டலந்தை வதை முகாம் செயற்பாடுகள் வரையான பல்வேறு நடவடிக்கைகளில் சிங்களவர்களின் பிறவிக் குணம் மாறாத செயற்பாடு இருந்து வந்தது.

தற்போது செம்மணிப் புதைகுழிப்பகுதியிலும் ஆடைகள் அற்ற நிலையில் வெளிவரும் எலும்புக்கூடுகளி்லிருந்து சிங்களவன்தான் அதையும் செய்துள்ளான் என்பதை அவர்களின் பிறவிக் குணத்தை வைத்து உறுதிப்படுததிக் கொள்ளலாம்.

சுண்டுக்குளி மகளீர் கல்லுாரி மாணவி ஞானந்தி படையினரால் திட்டமிட்டு கொல்லப்பட்டாரா?

ஞானந்தியின் நெருங்கிய நண்பியான தற்போதய அரசஅதிகாரி ஒருவரை நாம் கிருசாந்தி தொடர்பான சில தகவல்களுக்காக அணுகிய போது அவரால் சில தகவல்கள் எமக்கு தெரிவிக்கபட்டிருந்தன. அதில் முக்கியமானது ஞானந்தி படையினரால் திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்பதே.

ஞானந்தி 07.09.1996 அன்று காலை பரீட்சை எழுதச் செல்வதற்கு முன்னரே கண்டிவீதியில் கச்சேரிக்கு சற்றுத் தொலைவில் ரயில் கடவை தாண்டி 144 இலக்க ஞானந்தியின் வீட்டிலிருந்து சற்றுத் தொலை காலையிலிருந்தே இராணுவ வண்டி நின்றுள்ளது. ஞானந்தி வீட்டை வி்ட்டு வெளியேறிய போதே இராணுவ வண்டியும் புறப்பட்டு ஞானந்தியை நசுக்கியது என கூறினார். அத்துடன் கிருசாந்தி மற்றும் ஞானந்தியை கொலை செய்வதற்கு இராணுவத்தின் உயர்பீடம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது என எமக்குத் தெரிவித்திருந்தார். அத்துடன் அன்று ஞானந்தியைக் வாகனத்தால் அடித்துக் கொலை செய்த பின் பரீ்ட்சை எழுதிவிட்டு பாடசாலையை விட்டு வெளியேறி வந்துகொண்டிருந்த கிருசாந்தியின் பின்னால் இரு இராணுவ உளவாளிகள் சைக்கிளில் வந்து பின்தொடர்ந்து கொண்டிருந்தார்கள் எனவும் கிருசாந்தியுடனேயே தானும் பாடசாலை விட்டு வெளியேறி வந்து கொண்டிருந்தேன் எனவும் நாவலர் வீதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக   சின்னக்கிணத்தடி வீதியால் நான் செல்லும் போது கிருசாந்தி தனக்கு கைகாட்டி அனுப்பிவிட்டு தனியே கண்டிவீதியால் சென்று கொண்டிருந்தாள் எனவும் அவளின் பின்னால் குறித்த இரு புலனாய்வாளர்களும் சென்றார்கள் எனவும் எமக்குத் தெரிவித்தார்.

ஆனால் ஞானந்தி மற்றும் கிருசாந்தி ஆகியோரை இராணுவம் எதற்காக திட்டமிட்டு கொலை செய்ய வேண்டும் என நாம் அவரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் கூறிய சில காரணங்கள் ஊடங்களின் அடிப்படையில் இருந்ததாலும், ஞானந்தியின் மரணச்சடங்கில் கலந்து கொண்டிருந்தவர்கள் சிலர் தெரிவித்த தகவல்கள் என்பதாலும் நாம் அவற்றை ஆராய்ந்து பார்க்கவில்லை.

ஞானந்தியின் நிஜமான புகைப்படம்                       AI துணையுடன் வடிவமைக்கப்பட்ட புகைப்படம்

ஞானந்தியின் மரணச்சடங்கில் இராணுவப்புலனாய்வாளர்கள் பலர் மக்களோடு மக்களாக கலந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரம் குறித்த மரணச்சடங்கில் முதல்நாள் கிருசாந்தி காணாமல் போனது தொடர்பாகவும் பலரும் பல கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

ஞானந்தி அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் தீயுடன் சங்கமமானாள்.

சித்துப்பாத்தி மயானம் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்குப் பின் 1996ம் ஆண்டு யூன்மாத இறுதிப் பகுதியிலேயே மக்களின் பாவனைக்காக இராணுவம் அனுமதித்திருந்தது. ஆனால் செம்மனி இந்து மயானம் 1997ம் ஆண்டு நடுப்பகுதியிலேயே மக்கள் பாவனைக்கா திறந்துவிடப்பட்டிருந்தது.  ஏப்ரல் இறுதிப்பகுதியில் அரியாலைப்பகுதிக்கு வந்து குடியேறிய மக்கள் தமது இறந்த உறவுகளை எரிப்பதற்காக கொழும்புத்துறை துண்டி மயானத்தை பாவித்திருந்தார்கள்.

செம்மணியில் கிருசாந்தி மறிக்கப்பட்டாள்

காலை இரசாயணபாட பரீட்சை எழுதிவிட்டு 11.30 மணிக்கு பாடசாலையை விட்டு வெளியேறிய கிருசாந்தி தனது நண்பிகள் இருவருடன் மாம்பழம் சந்திவரை பயணம் செய்துள்ளாள். அதன் பின்னர் வீதியால் சைக்கிளில் செல்லும் பயணிகளுடன் தனித்தே கைதடியில் உள்ள வீட்டுக்கு சென்று கொ்ண்டிருந்தாள். செம்மணிப் பகுதியில் கிருசாந்தி அங்கு நின்ற படையினரால் மறிக்கபட்டாள். பாடசாலையில் ஞானந்தியின்  சாவுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் செய்வது தொடர்பாக அங்கு கிருசாந்தியை படையினர் கேள்விகேட்டதாகவும் கிருசாந்தி அவர்களுக்கு கடுமையான முறையில் பதில் கூறியதாகவும் அப்பகுதியால் சென்றுகொண்டிருந்தவர்கள்  கிருசாந்தியும், தாயார், சகோதரன் காணாமல் போன பின் கிருசாந்தியின் உறவினரான பிரதமதபாலதிபராக இருந்த சு. கோடீஸ்வரனுக்கு தெரிவித்துள்ளார்கள்.

கிருசாந்தி செம்மணியில் மதியம் ஒரு மணிவரை குறித்த காவலரணின் அருகில் வீதியோரத்தில் பயணிகள் பார்க்கும் படியான பகுதியிலேயே காணப்பட்டுள்ளாள். 2 மணியளவில் அப்பகுதியால் சென்றவர்கள் கிருசாந்தியை காணவில்லை.

ஏ9 வீதியில் செம்மணியின் வளைவுப் பகுதியில் வடக்குப் பகுதியில் இராணுவத்தின் பாரிய காவலரண் ஒன்றும் தெற்குப் பக்க மூலையில் உள்ள சிறிய கோவில் பகுதியில் பயணிகளைப் பரிசோதனை செய்கின்ற சிறிய தடையுடன் கூடிய காவலரணும் இருந்தது. அந்த காவலரணுக்கு அருகில் சிறிய பிள்ளையார் கோவில் உள்ளது. அந்தப் பிள்ளையார் கோவிலுக்கு தெற்குப் பக்கமாக சில மீற்றர்கள் துாரத்திலேயே கிருசாந்தி மற்றும் தாயார், சகோதரன், அயலவனின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புலிப் பெண் போராளிகளை இராணுவம் நிர்வாணமாக கை, கால்கள், வாயைக் கட்டி படுக்க வைத்துள்ளதாக சின்னப்பொடி கூறிய கொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவிலும் அதற்கு கிழக்கு பகுதியில் மக்களின் வாழ்விடத்தில் இருந்த இராணுவமுகாமும்…

கிருசாந்தி எங்கு கொண்டு செல்லப்பட்டிருப்பாள்….

கிருசாந்தியை பிடித்து வைத்திருந்த இராணுவம் கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோவிலுக்கு கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமிற்கே கொண்டு சென்றிருக்கலாம். ஏனெனில் அந்த முகாமில் படையினர் தொடர்ச்சியாக தங்குவதில்லை. ஏற்கனவே மக்கள் வாழ்ந்த பகுதி அது. அங்கு ஓரிரண்டு கல்வீடுகளே இருந்தன. குறித்த முகாமை சித்திரவதைகள் மற்றும் பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்வதற்காக படையினர் கையாண்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான கிளிநொச்சி, பூநகரிப்பகுதியிலிருந்து புலிகளுக்கு தெரியாது இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு கடல்மார்க்கமாக வந்து  அரியாலை கிழக்குப் பகுதியில் வந்து இறங்கிய குடும்பங்களே குறித்த முகாம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு கொடூர சித்தரவதைகளுக்குப் பின் கொல்லப்பட்டு சித்துப்பாத்தி மயானத்துக்குள் புதைக்கப்பட்டிருக்கலாம்.

ஏனெனில் அருளையா நவநேசன் அவரது மனைவி மற்றும் மகள்கள் ஆகியோர் இன்றுவரை காணாமல்போனவர்களாகவே உள்ளார்கள். அவர்கள் குறித்த முகாமுக்கு கொண்டு வரப்பட்ட கடும் சித்திரவதை, வல்லுறவுகளுக்குப் பின் அடித்துக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம்.

கிருசாந்தி கொடூரமாகக் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பின்னர் அரியாலைப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த லெப்டினன் கேணல் மற்றும் மேயர் இருவர் உட்பட பல இராணுவத்தினர் அங்கிருந்த உடனடியாக மாற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும்.

 இராணுவ நடவடிக்கையின் போது முன்னணிக் காவலரண்களில் நிறுத்தப்படும் இராணுவத்தினர் கடும் போக்கானவர்கள் என்பதுடன் சிறிதும் இரக்க குணம் இல்லாதவர்கள் என்பது பலருக்கும் தெரிந்த விடயமாகும். அவ்வாறானவர்கள் பொதுமக்கள் மத்தியில் காணப்பட்டமை பொதுமக்களுக்கு மிகக் கொடுமையான செயற்பாடுகள் நடைபெறுவதற்கு காரணமாக அமைந்திருந்தன.

அரியாலைக்குப் பொறுப்பாக இருந்த குறித்த லெப்டினன் கேணல் ( பெயர் விபரங்களை அறிய முற்பட்டுள்ளோம்) மாலை வேளைகளில் சைக்கிளில் கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோவில் பகுதிக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இவன் ஒரு கடும் துவேசம் பிடித்தவன் என்பதுடன் பெண்கள் விடயத்தில் மிகக் கேவலமான நடத்தையுடையவன் என்பதும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அறிந்திருந்தார்கள்.

ஏ9 வீதியில் அரியாலை தபால்கட்டைச்சந்திக்கு அருகாமையில் சிறீபார்வதி வித்தியாசாலைக்கு சற்றுத் தொலைவில் தனது கணவன் மற்றும் 2 வயது குழந்தையுடன் தனியே வசித்து வந்த அழகான இளம்பெண் மீது இவனது கண் பட்டது.

ஒரு நாள் இரவு பக்கத்து வீட்டில் ரீவி பார்த்துக் கொண்டிருந்த குறித்த இளம்பெண்ணையும் கணவனையும் பிடித்துச் சென்றார்கள் இராணுவத்தினர். குழந்தையை கொண்டு தம்முடன் கொண்டு செல்ல முற்பட்ட போது அக் குழந்தையை பறித்து அயலவரிடமே கொடுத்துவிட்டு இருவரையும் குறித்த கொட்டுக்கிணற்றடி பகுதி முகாமிற்கு கொண்டு சென்றனர் இராணுவத்தினர். அங்கு வைத்து அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடூர வல்லுறவுக்கு உள்ளாக்கினான் குறித்த லெப்டினன் கேணல். அவன் அங்கிருந்து சென்ற பின் அவனுக்கு கீழ் செயற்பட்ட மேயர் மற்றும் கப்டன் போன்ற பலரால் கொடூரமாக சிதைக்கபட்ட்ட அப் பெண்ணையும் கணவரையும் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்து புதைத்தனர் இராணுவத்தினர். இது தொடர்பாக கிருசாந்தி குமாரசுவாமி வழக்கில் துாக்குத்தண்டனை பெற்ற இராணுவ கோப்ரல் கூறியிருந்தும் குறித்த இராணுவ லெப்டினன் கேணல் கைது செய்யப்படவில்லை.

செம்மணிப் புதைகுழிகள் தோண்டப்படும் காட்சி 1999 

யாழ்ப்பாண பகுதியின் பிரிகேடியராக 1996ம் ஆண்டு யூலை மாதம் 4ம் திகதிவரை செயற்பட்ட ஆனந்தஹெமட்ட கொடவும் கடும் துவேசம் நிறைந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1996ம் ஆண்டு யூலை 4ம் திகதி நடந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் பலியானார்.

தொடரும்…..