புதினங்களின் சங்கமம்

யாழில் மீனவர்களிடையே நடந்த கடும் சண்டை!! வீடியோ

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது
இதனை மீறி அங்கு சிலர் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்து வந்தனர்
இந்நிலையில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் செம்பியன்பற்று சென் பிலிப்நேரியார் கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு மதுபோதையில் தடிகளுடன் கரைவலை வாடிகளுக்கு சென்ற கும்பல் அங்கிருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்
இந்த தாக்குதல் சம்பவத்தில் பலத்த காயமடைந்த மீனவர் ஒருவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு பருத்துறை ஆதாரவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
சம்பவவம் தொடர்பாக மருதங்கேணி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
May be an image of 4 people, camel, kite, outdoors and textMay be an image of 3 people, people playing cricket, kite, outdoors and textMay be an image of 3 people, kite, beach and textMay be an image of 5 people, skateboard and text