சுவிஸ் அங்கிளை 2ம் தாரமாக கட்டிய வவுனியா யுவதி சுவிஸ் சென்று விமானநிலையத்திலேயே காதலனுடன் தலை மறைவு!! அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட அங்கிள்!!
விவாகரத்துப் பெற்று வாழ்ந்து வந்த 43 வயதான வவுனியாவைச் சேர்ந்த சுவிஸ்லாந்தில் வாழும் பற்குணராஜா செல்வநேசன் என்ற அங்கிளை கடந்த வருட இறுதிப் பகுதியில் வவுனியாவில் வைத்து திருமணம் முடித்த 27 வயதான வர்மிளவேணி எனும் யுவதி தனது கணவரால் சுவிஸ்லாந்துக்கு அழைக்கப்பட்ட போது சூரிச் விமானநிலையத்தில் வந்து இறங்கி சில மணி நேரங்களிலேயே இன்னொரு இளைஞனுடன் தலைமறைவாகியுள்ளார். சூரிச் விமான நிலையத்தில் வந்திறங்கிய தனது மனைவியைக் காணவில்லை என பொலிசாரிடம் முறையிட்ட போது பொலிசார் சிசிரிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து பார்த்த போது குடும்பஸ்தரின் மனைவி இன்னொரு இளைஞனுடன் ஜோடியாக சென்று காரில் ஏறி மறைவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த யுவதி தனது சொந்த விருப்பின் பேரில் இளைஞனுடன் சென்றுள்ளதாக குடும்பஸ்தருக்கு பொலிசார் தெரிவித்துள்ளார்களாம்.
அத்துடன் குறித்த குடும்பஸ்தருக்கு தொலைபேசி மூலம் தொடர்பெடுத்த அந்த பெண் தனக்கு செலவு செய்த பணம் மற்றும் தாலிக்கொடி,நகைகளுக்காக பணத்த மீளவும் திரும்பச் செலுத்துவதாக கூறியதுடன் தான் ஏற்கனவே காதலித்து வந்தவருடன் சேர்ந்து வாழப் போவதாக கூறியுள்ளார். குறித்த யுவதியின் காதலன் பிரான்ஸ் பகுதியில் வசித்து வருவதாகத் தெரியவருகின்றது.
இதனால் கடுப்பான சுவிஸ் கணவர் தற்போது அந்தப் பெண்ணுடன் சேர்ந்து திரிந்த மற்றும் அந்தரங்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருவதுடன் ஊடகங்கள் சிலவற்றுக்கும் அனுப்பி வருகின்றார்.
இதேவேளை வவுனியாவில் செல்வநேசன் மற்றும் வர்மி ஆகியோர் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்றும் செல்வநேசன் தனது மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வர்மி எனவும் ஊரவர்கள் தெரிவித்துள்ளார்கள். செல்வநேசன் இரு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் மனைவி விசேட தேவைக்குரியவர் எனவும் தெரியவருகின்றது. 2001ம் ஆண்டளவில் வவுனியாவில் சைக்கிள் திருத்தும் கடை ஒன்றை வைத்திருந்த செல்வநேசன் சுவிஸ்லாந்தில் உள்ள உறவினர் ஒருவர் ஊடக விசேட தேவையுள்ள பெண்ணை திருமணம் செய்வதாக கூறியே சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வந்த அந்த பெண்ணை இங்கிருந்து சென்று கலியாணம் கட்டி வாழ்ந்து வந்தார் எனவும் தெரியவருகின்றது.

