புதினங்களின் சங்கமம்

சாராய பார் லைசன்ஸ் வழங்கிய ரணில் சிறைக்கு செல்ல ஆயத்தமாகின்றார்??

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், கலால் சட்டத்தை மீறி புதிய மதுபான உரிமங்களை வழங்கியதன் மூலம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட ட இரண்டு மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜூலை 26, 2024 முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற செப்டம்பர் 24, 2024 வரையிலான இரண்டு மாத காலப்பகுதியில் வழங்கப்பட்ட மதுபான உரிமங்கள் தொடர்பான தகவல்களையும், 2024 இல் புதிதாக வழங்கப்பட்ட மதுபான உரிமங்கள் தொடர்பான தகவல்களையும் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறும் கலால் ஆணையர் நாயகத்துக்கு உயர் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டது.

இந்த மனு இன்று (03) நீதிபதிகள் யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.குணசிறி, மேலதிக கலால் ஆணையாளர் ஏ.எம்.பி. அரம்பால, பிரதி ஆணையாளர்கள் ஆகியோர் உட்பட மேலும் சிலருக்கு எதிராக மாத்தளையைச் சேர்ந்த தங்கவேலு தனேந்திரராஜா உள்ளிட்ட குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.