புதினங்களின் சங்கமம்

மன்னாரில் மருத்துவக் கொலை செய்யப்பட்ட இளம் தாய் சிந்துஜாவின் கணவன் சுதன் தற்கொலை!!

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாயான சிந்துஜாவின் கணவர் நேற்று இரவு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

கடந்த மாதம் மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் மருத்துவ தவறின் காரணமாக உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் அவரது கணவர் நேற்றயதினம் அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

குறித்த சம்பவத்தில் வவுனியா பனிக்கர் புளியங்குளத்தை சேர்ந்த 26 வயதுடைய எஸ்.சுதன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

அவரது மரணம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாயின் மரணம் தொடர்பாக தாதியர் மற்றும் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியர் ஒருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் எம்.எச்.அஸாத் தெரிவித்துள்ளார்.