புதினங்களின் சங்கமம்

யாழில் அப்பாவி ரிதிகேசன் லோயரை கேவலப்படுத்தியவர் சிறைக்குள்!!

யாழ் இணுவில் பகுதியைச் சேர்ந்த கற்பகப் பிள்ளையார் கோவிலடி உடுவில் கிழக்கு சுன்னாகத்தில் அலுவலகம் வைத்துள்ள சட்டத்தரணி சிவலிங்கம் ரிதிகேசனை கேவலப்படுத்த்தி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதாக கூறி சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஒருவர் எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ரிதிகேசன் லோயரால் எழுதுப்பட்ட ஒரு உறுதி சமூகவலைத்தளங்களில் உலாவி வந்தது. அந்த உறுதி காரைநகரைச் சேர்ந்த கோயில் ஒன்றிற்கான உறுதியாகும். குறித்த உறுதி தொடர்பாக நாமும் ”கள்ள உறுதி எழுதிய ரிதிகேசன்” என்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் பின் ரிசிகேசன் கள்ள உறுதிதான் எழுதினாரா என சட்டத்தரணி ஒருவரிடம் அந்த உறுதி தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது குறித்த சட்டத்தரணி எமக்கு இவ்வாறு பதிலளித்தார்….

கடந்த காலங்களில் இடம்பெயர்வு, யுத்தநிலை போன்றவற்றால் பலர் தமது உறுதிகளை தொலைத்திருக்கலாம். அவ்வாறானவர்கள் தமது உறுதி தொலைந்தமைக்காக வெளிப்படுத்தல் உறுதி எழுதுவது வழமை. ஆனால் வெளிப்படுத்தல் உறுதி என்பது உண்மையான உறுதியைப் போல பெறுமதியானது அல்ல. வெளிப்படுத்தல் உறுதியை யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்பதால் அந்த உறுதி சந்தேகக் கண்ணுடனே நோக்கப்படும். முன்னைய காலங்களில் வெளிப்படுத்தல் உறுதி எழுதி காணிகளை மோசடி செய்வது போல் தற்போது செய்ய முடியாது. ஏனெனில் தற்போது லோயர்மார் எழுதுகின்ற உறுதிகள் கச்சேரியால் பிரதேசசெயலகங்களுக்கு அனுப்பப்பட்டு அந்தக் காணி அரச காணியா? இன்னொருவரின் காணியா? தரிசுக் காணியா என அங்கு அது தொடர்பாக புலனாய்வு செய்யப்பட்டே பதிவாளரால் தோம்பு எனப்படும் புத்தகத்தில் பதியப்படும். ஆனால் சட்டங்களில் இருக்கும் சில ஓட்டைகள் காரணமாக சில வேளை வெளிப்படுத்தல் உறுதியை தயாரித்து காணி மோசடிகள் செய்பவர்கள் சிலர் இலகுவாக தப்பித்துக் கொள்கின்றார்கள். பிரதேச செயலகங்களில் உள்ள அதற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் சிலர் காணி எழுதிய லோயருடன் தொடர்பு கொண்டு வெளிப்படுத்தல் உறுதி எழுதிய காணிக்காரனிடம் சந்தோசம் பெற்றுக் கொண்டு காணியை அவருக்கு சொந்தமாக்கின்றவர்களும் உண்டு என எமக்கு பதிலளித்தார்.

அதன் பின்ன எம்மால் சில கேள்விகள் கேட்கப்பட்டன.

வடிவேலு கிணறு வெட்டியது போல் யாழ்ப்பாணத்திலேயே இல்லாத ஒரு காணிக்கும் யாராவது ஒரு லோயர் வெளிப்படுத்தல் உறுதி எழுதலாம்தானே ? யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் உள்ள கிட்டுபூங்காவுக்கு வெளிப்படுத்தல் உறுதி எழுதி யாழ் மாநகரசபையில் இருக்கும் மலைவிழுங்கி மாதாக்களுக்கும் காசு கொடுத்து சோலை வரிப் புத்தகத்தில் பதிவும் செய்து நல்லுார் பிரதேசசெயலக அதிகாரிகளையும் திருப்திப்படுத்தி கச்சேரி காணி அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து கிட்டு பூங்காவை எமக்கு சொந்தமாக்கலாம்தனே. நாம் அறிந்தவரை கிட்டுபூங்காவுக்கு எந்த ஒரு அரச நிறுவனத்திடமும் உறுதி கிடையாது. கி்ட்டு பூங்காவின் ஓரத்தில் சிறிய கச்சான் பெட்டியை  வைத்து விற்றுக் கொண்டு நீண்டநாட்களாக நாம் இங்கு வாழ்கின்றோம். இந்த சொத்தைப் பராமரிக்கின்றோம். எங்கள் பரம்பரையிடம் உறுதி இருந்தது. யுத்த நடவடிக்கையில் உறுதி தொலைந்துவிட்டது என தெரிவித்து வெளிப்படுத்தல் உறுதி எழுதி வைத்திருக்கலாம்தானே.  அது தொடர்பாக யாராவது வழக்குப் போட்டால் இந்த உறுதி பொய் என்றால் உணமையான உறுதி இருந்தால் கொண்டு வாங்கோ என நீதிமன்றில் கேள்வி கேட்டு அரச அதிகாரிகளை நிலைகுலைய வைக்கலாம்தானே என நாம் குறித்த சட்டத்தரணியை கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

May be an image of ticket stub and text