புதினங்களின் சங்கமம்

கடவுளே எங்களைக் காப்பாற்று; பூஜை செய்து ஆசி பெறும் ஊழல், மோசடிக்காரர்கள்!

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள், அவர்களின் உறவினர்கள், குழுவினர்கள் எனப் பலரும் தாம் சார்ந்த மதத் தலங்களுக்குச் சென்று பூஜைகள் செய்து ஆசி பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பூஜைகள் செய்பவர்கள் பல்வேறு ஊழல் மற்றும் சட்டவிரோத சொத்து சேர்த்தல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களாவர்.

மேலும் அண்மைய நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள் கதிர்காம தேவாலாயத்துக்கு சென்று பூஜைகள் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், முன்னாள் அரசியல்வாதிகளைத் தவிர, பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட உயர் அரசு அதிகாரிகள் விஹாரைகளுக்குச் சென்று பூஜைகள் செய்து ஆசி பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.