திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் மீனவர் ஒருவர் காயமுற்ற நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.!
இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






