வவுனியாவில் 32 வயது கர்ப்பிணியை கொன்று மனைவியின் தலையுடன் கணவர் பொலிஸாரிடம் சரண்!!
வவுனியா அனந்தர் புளியங்குளம் சொச்சிகுளம் கிராமத்தில் குடும்பத் தகராறினால் மனைவியின் வெட்டிய தலையுடன் கணவன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த நபர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து தலையை உந்துருளியில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார்.
இன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன் மனைவியை கொலை செய்து நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கணவன்- மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது. இதனால் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் கழுத்தை வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டு உந்துருளியின் டிக்கிக்குள் வைத்து புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து பொலிசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.





