கனடா ரவி இறந்து அந்தியேட்டி நடந்த கையுடன் வீட்டு தளபாடங்களை துாக்கிச் சென்ற உறவுகள்! வேலணையில் சம்பவம்!! வீடியோ
வேலணை 2ம் வட்டாரத்தைச் சொந்த இடமாகவும் கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட ரவி என்று அழைக்கப்படும் ரவீந்திரன் என்பவர் கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார். மீண்டும் அவர் கனடா திரும்பிச் செல்வதற்காக கடந்த மாதம் 29ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் போது செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது அந்தியேட்டி கிரிகைகள் நேற்று நடந்துள்ளது. அந்த கிரிகைகள் நடந்து முடிந்த பின் அவரது வீட்டில் இருந்த தளபாடங்களை அங்கு நின்ற உறவனர்கள் பங்கு பிரித்துச் செல்லும் காட்சிகள் குறித்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவியில் பதிவாகியுள்ளது. இதனால் ரவீந்திரனின் நெருங்கிய உறவுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். சிசிரிவி அங்கு இருப்பது தெரியாது வீட்டில் கொள்ளையடிப்பது போல் பொருட்களை கொண்டு செல்வது இங்கு காட்டப்பட்டுள்ளது.

