முகத்தை வெண்மையாக்க பாவிக்கும் ஆபத்தான கிரீம்கள் தொடர்பில் ஒரு வைத்தியர் வெளியிடும் கருத்துக்கள்!!
மிக மிக முக்கியமான பதிவு
இயலுமானவரை அனைவரையும் சென்றடைய உதவுங்கள்.
சந்தையில் கிடைக்கும் முகத்தை வெண்மையாக்க உதவும் தரமற்ற க்ரீம்கள் பற்றி பல பதிவுகளை நான் பகிர்ந்துள்ளேன். என்னிடம் இப்படியான க்ரீம்களை பாவித்து பக்க விளைவுகளுடன் வரும் நோயாளர்களுக்கும் என்னாலான சிகிச்சை மற்றும் அறிவுரைகளை வழங்கி வருகின்றேன்.
ஆனாலும் இவ்வாறான தரமற்ற பாதகமான க்ரீம்கள் சர்வ சாதாரணமாக எல்லா கடைகளிலும் கிடைக்கிறது.
இதை தடுக்கும் வழிமுறைகள் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
கீழே பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள பாதகம் விளைவிக்கும் க்ரீம்களின் பட்டியலை பகிர்ந்துள்ளேன்.
இதை பார்க்கும் போது உங்களால் உணர முடியும் சாதாரணமாக எல்லா fancy கடைகளிலும் இவை அடுக்கி வைக்கப்பட்டு உள்ள க்ரீம்கள் தான். அவற்றில் காணப்படும் புற்றுநோயை விளைவிக்கும் பார உலோகங்களின் அளவுகளை பாருங்கள்.
பணம்கொடுத்து நோயைவிலைக்குவாங்கும்செயற்பாடுதான் இந்த க்ரீம்களை பாவிப்பதால் ஏற்படும்.
நாம்தான் விழிப்பாக இருக்க வேண்டும்.
தயவு செய்து வெள்ளைத்தோல் வேண்டும் என்ற மாயயை விட்டுவிட்டு ஆரோக்கியமாக இருக்க முயற்சிப்போம்.
மனசாட்சி மிக்க வியாபாரிகள் இவ்வாறான க்ரீம்களை தமது கடைகளில் விற்பனை செய்வதை நிறுத்தினால் இன்னும் பேருதவியாக இருக்கும்.
நன்றி
Dr. தனுஷா பாலேந்திரன்
MBBS, MD Dermatology, MRCP (UK), SCE Dermatology (UK)
Consultant Dermatologist / தோல் நோய்களுக்கான விஷேட வைத்திய நிபுணர்.




