புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

ஜேர்மன் நண்பனுடன் கட்டிலில் மனைவியைக் கண்ட வவுனியா பிரபல வர்த்தகர் உயிர் மாய்க்க முயற்சி!! மனைவி மீது உறவுகள் தாக்குதல்!!

வவுனியா நகரப்பகுதியில் உள்ள முக்கிய வர்த்தகநிலையம் ஒன்றின் முதலாளி தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். அவரது வர்த்தக கட்டடம் ஒன்றில் நேற்று மாலை துாக்கில் தொங்க முற்பட்ட வேளை அதனைக் கண்ணுற்ற ஊழியர் ஒருவர் அவரை நோக்கி விரைந்து சென்ற போது அவர் துாக்கில் தொங்கியுள்ளார். உடனடியாக ஊழியர் குக்குரல் இட்டு ஏனையவர்களை அழைத்து அவரை துாக்கிலிருந்து மீட்டதாகத் தெரியவருகின்றது. இதன் பின் உறவுகள் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை . ஆனால் இரு நாட்களாக அவர் தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்ததுடன் மனைவியை தனது வீட்டிலிருந்து அகன்று செல்லுமாறு கூறி வந்ததாகவும் வர்த்தக நிலையத்திலேயே இரு நாட்களும் தங்கியிருந்தாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அவர் துாக்கில் தொங்குவதற்கு முன் அவரது தொலைபேசியால் எடுக்கப்பட்ட சில காட்சிகள் அவரது மனைவியின் தம்பிக்கு அனுப்பப்பட்டிருந்தது வர்த்தகரின் உறவுகளால கண்டு பிடிக்கப்பட்டது. வர்த்தகரின் நெருங்கிய நண்பனாக இருந்த ஜேர்மனியைச் சேர்ந்த குடும்பஸ்தர் வர்த்தகரின் மனைவியுடன் கட்டிலில் இருக்கும் காட்சிகளும் அந்தக் காட்சிகளை வர்த்தகர் எடுத்த போது வர்த்தகரின் நண்பன் அரைகுறை ஆடையுடன் வர்த்தகரை நோக்கி ஓடிவருவதும் பதிவாகியுள்ளதை அவதானித்துள்ளார்கள். இதனையடுத்து வர்த்தகரின் மனைவி உறவினர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியாசலை ஒன்றில் அனுமதிக்கபட்டுள்ளார் . அ்த்துடன் வவுனியாவிலிருந்து எஸ்கேப் ஆன ஜேர்மன் நண்பனை வர்த்தகரின் உறவுகள் பல இடங்களிலும் வலை வீசித் தேடி வருகின்றனர்.