புதினங்களின் சங்கமம்

யாழில் உயிருக்கு போராடிய மீனவர்கள் – கடற்படையினர் செய்த மோசமான செயல்(video)

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மீண்டும் கரைக்கு திரும்பிய மீனவர்களது படகின் மீது இராணுவத்தினரின் மோதியுள்ளனர். இதனால் மீனவர்களின் படகு பலத்த சேதமடைந்துள்ளது.

நேற்று இரவு 10.50 மணியளவிலே யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியிலிருந்து மீன்பிடித் தொழிக்குச் சென்று கரை திரும்பிக் கொண்டிருந்த போது கடற் கரையிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் கடற்படையினர் வழி மறித்துள்ளனர். தமக்கு மீன் தருமாறு கேட்டுள்ளனர். மீனை கொடுத்து விட்டு கரைக்கு வர இயந்திரத்தை இயக்க முற்பட்ட வேளை கடற்படையினர் குறித்த படகு மீதி மோதி தள்ளியுள்ளனர். இதனால் கணபதிப்பிள்ளை சிவச்சந்திரன் (மயூரன்) என்பவரது படகு பலத்த சேதமடைந்துள்ளது.
திருகோணமலையில் கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயம்
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

குறித்த படகில் பறவைத் வலை தொழிலுக்காக சென்ற ஜெயபாலு ஜெயநேசன்,செளந்தராசா செல்வக்குமார் ஆகிய இருவரும் கரைக்கு திரும்பி வரும்போது இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமது படகு கடலில் மூழ்குவதாகவும் தம்மை காப்பாற்றுமாறும் கூச்சலிட்ட போதிலும் கடற்படை தம்மை அப்படியே விட்டிட்டு சென்றுவிட்டனர். கடற்படையினர் மதுபோதையில் இருந்தனர். தாம் உடனடியாக கரையிலுள்ள நண்பர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது படகுகளை வரவளைத்தே தமது படகை கட்டி இழுத்து கரைக்கு கொண்டுவந்தோம் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் மற்றும் பளை பொலிஸாரிடம் ஆகியோரிடம் முறையிட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.