புதினங்களின் சங்கமம்

யாழில் உள்ள பெண்கள் பாடசாலை ஆசிரியையின் முத்தக் காட்சிகள்  இணையத்தளங்களில் !! கனடா காதலன் வெளியிட்டாரா?

யாழில் உள்ள பெண்கள் பாடசாலை ஆசிரியை ஒருவரின் முத்தக் காட்சி சிங்கள தவறான இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளது. குறித்த ஆசிரியை தற்போது திருமணம் முடித்துள்ளார். திருமணம் முடிப்பதற்கு முன்னர் தன்னோடு பாடசாலையில் ஒன்றாக கற்ற ஒருவனை காதலித்து வந்துள்ளார். காதலன் ஏ.எல் உடன் கல்வியைக் கைவிட்டுவிட்டு காவாலியாகத் திரிந்ததாலும் திருட்டு வாகனம் ஒன்றை வாங்கியதால் சில நாட்கள் சிறைக்குள் சென்றதாலும் 2016ம் ஆண்டளவில் மனமுடைந்து அவனது காதலை முறித்துக் கொண்டதாகத் தெரியவருகின்றது.

இதன் பின் ஆசிரியைக்கு  2021ம் ஆண்டளவில் ஆசிரியை வேலை கிடைத்துள்ளது. அதன் பின்னர் ஆசிரியைக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஒன்றை காதலன் குழப்பியுள்ளார். இது தொடர்பாக பொலிஸ் நிலையம் வரை சென்று நீதிமன்றில் வழக்கும் நடைபெற்றுள்ளது. இந் நிலையில் முன்னாள் காதலன் 2023ம் ஆண்டு காலப்பகுதியில் கனடாவுக்கு சென்றுள்ளார். இதன் பின்னரே ஆசிரியைக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆசிரியையின் முத்தக் காட்சிகள் சிங்கள தவறான இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளது. குறித்த காதல் காட்சிகளை வைத்தே காதலன் முன்னரும் திருமணத்தை குழப்பியிருந்ததாக ஆசிரியையின் நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆசிரியைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.