புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் முதலை இழுத்துச் சென்ற அழகேசனின் தலையும் காலும் கண்டு பிடிக்கப்பட்டது!! வீடியோ

நேற்று (20) மாலை மட்டக்களப்பு மண்முனைப் பாலத்தை அண்டிய ஆற்றுப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவரை முதலை பிடித்து இழுத்துச் சென்ற நிலையில் இன்று(21) மதியம் சடலமாக மீட்கப்பட்டார்.
இவருடைய உடலின் பெரும்பாலான பாகங்களை முதலை உட்கொண்டுருந்த நிலையில் எஞ்சிய உடற்பாகங்களை பிரதேச மீனவர்கள் மீட்டெடுத்துள்ளனர்