பருத்தித்துறையில் ஆழ் கடலுக்குள் 80 அடி ஆழத்தில் கடல் அட்டை பிடிக்க போன மீனவனை மர்ம விலங்கு விழுங்கியதா??

பருத்தித்துறை கடலில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கடலட்டை பிடிப்பதற்க்காக சென்ற திருகோணமலை குச்சவெளியை சேர்ந்த 30 வயதுடைய சுயூட்கான் பாஜத்கான் எனும் இரண்டு குழந்தைகளின் தந்தை காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

காணாமல் போன நபர் கடலில் சுமார் 80 அடி ஆழத்தில் ஒட்சிசன் சிலிண்டருடன் சென்று அட்டைகளை பிடித்துவந்து படகில் வைத்துவிட்டு இரண்டாவது ஒட்சிசன் சிலிண்டரை எடுத்துக் கொண்டு மீண்டும் கடலிற்கடியில் அட்டை பிடிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் கடலிற்க்கு அடியிலிருந்து மேலே வராதமையால் படகை ஓட்டிச் சென்றவர் அவருடன் இணைக்கப்பட்ட கயிற்றை மேலே இழுத்துள்ளார். குறித்த நபர் இன்றி கடலட்டையும் கயிறுமே மேலே வந்துள்ளது.

இதனை அடுத்து குறித்த தொழிலில் ஈடுபடுத்தும் முதலாளிக்கு அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் நூறு படகுளில் கடற்படையும் இணைந்து குறித்த ஆழ்கடல் பகுதியில் தேடுதல் நடாத்தியுள்ள நிலையிலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்றும் நூறு படகுகளிலும் இன்றும் எழுபது படகுகளிலும் சென்று தேடுதல்கள் இடம் பெறுகின்ற போதிலும் குறித்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை என கடலட்டை தொழிலில் ஈடுபடுத்தும் முதலாளி தெரிவித்தார்.

தற்போது அதிவேகமாக காற்று வீசிக்கொண்டிருப்தனால் தேடுதல் பணிகளில் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் கடற்படையின் ஏழு வரையான இயந்திரப் படகுகள் தம்முடன் இணைந்து 24 மணி நேரமும் தேடுதலில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் பருத்தித்துறை போலீசாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை கிடைக்காத காரணத்தால் கடலுக்கு அடியில் பாரிய சுறா மீன் அல்லது வேறு கடல்வாழ் உயிரினம் குறித்த மீனவனை விழுங்கியிருக்கலாம் எனவும் அச்சம் நிலவுகின்றது.

error

Enjoy this blog? Please spread the word :)