இறுதி யுத்தத்தில் கொத்துக் குண்டு வெடித்து பாதிப்படைந்த சிறுமியின் தற்போதய நிலை இது!!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்
இலங்கை வவுனியாவில் இருந்து, போரில் வீசப்பட்ட கொத்துக் குண்டு வெடித்து சிதறியதில் பாதிப்படைந்த ஒரு பெண் சிகிச்சைக்காக இன்று வந்திருந்தார்.
46 வயது இன்னும் திருமணமாகவில்லை.
முதுகு தண்டுவடப் பகுதியில் குண்டு வெடித்த சிதறல் பட்டதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு,
சிறுநீர் மலம் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறார்.
கால் நரம்புகள் கை நரம்புகள் பாதிக்கப்பட்டு விட்டது.
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மற்றவர்கள் உதவி இல்லாமல் இவரால் நடந்து செல்ல முடியாது.
போரில் வீசப்படும் குண்டுகளால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற நோயாளர்களை, இலங்கை கம்போடியா வியட்நாம் நாடுகளில் நேரடியாக சந்தித்து இருக்கிறேன்.
போர் தூர இருந்து பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கும், ஆனால் போர்களத்தில் சிக்குவது அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகளே.
சித்தர் திருத்தணிகாசலம்


