புதினங்களின் சங்கமம்

யாழில் கடும் காய்ச்சல் காரணமாக முன்னாள் முன்பள்ளி ஆசிரியர் தெய்வநாயகி பலி!!

வதிரி செல்லையா  பாடசாலை வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும்   செல்லையா தெய்வநாயகி (வயது 71) முன்னாள் முன்பள்ளி ஆசிரியர்  நேற்றைய தினம் தினம்  திடீர் காய்ச்சலால் கைதடி முதியோர் இல்லத்தில்  இறைபதம் அடைந்தார் ,

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி  ஸ்தாபகரின் மகள் ஆவார்  .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் உள்ள அரச முதியோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 4 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.