யாழில் சாமத்தியவீட்டில் கணவனை கைது செய்ய தேடிய பொலிஸ்!! ஐஸ்கிறீம் குடித்து மகிழ்ந்த மனைவி!!(Photos)
மண்டபத்துக்குச் சற்றுத் தொலைவில் பொலிசார் கணவனைக் கைது செய்ய ஆயத்தமாக நின்ற வேளையிலும் அதைப் பற்றி சற்றும் கவலைப்படாது மனைவி தனது மகளின் சாமத்தியிவீட்டில் ஐஸ்கிறீம் குடித்து மகிழ்ந்த சம்பவம் இன்று யாழ் கொக்குவில் பூநாறிமடப்பகுதியில் உள்ள செல்வா பாலஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தொடர்பாக போலி இணையத்தளத்தில் செய்திகளை வெளியிட்டு அவர்களிடம் கப்பம் பெற்றுவந்தவனும் நீதிபதிகள் தொடர்பாக கேவலமான செய்திகளை வெளியிட்டும் யாழ்ப்பாணத்துக்கு வருடத்துக்கு ஒருமுறை வந்து பெண்களுடன் அந்தரங்கத் தொடர்பைப் பேணி வந்தவனுமாகிய ‘ஊத்தை சேது‘ என அழைக்கப்படும் நடராஜா சேதுரூபன் என்பவனின் மனைவியே இவ்வாறு ஐஸ்கிறீம் குடித்து மகிழ்ந்துள்ளார்.
குறிப்பு – தன்னால் அவமதிக்கப்பட்டவர்களை தனித்தனியே தொலைபேசியில் தொடர்பு எடுத்து கெஞ்சி வருவதாகவும் இராணுவப் புலனாய்வாளர்களே தனக்கு தவறான தகவல்களை வழங்கி நியுஜப்னா.நெற் இணையத்தளத்தை நடாத்த உதவி செய்தார்கள் எனவும் ஊத்தை சேது தெரிவித்துவருகின்றான். நீதிபதிகளைப் பற்றி தவறான தகவல்களை இராணுவப்புலனாய்வாளர்களே தனக்கு தந்ததாகவும் அவன் பலரிடம் தெரிவித்துள்ளான். இதே வேளை இவன் தொடர்பாக முழுமையான விசாரணைகளை சம்மந்தப்பட்ட தரப்புக்கள் ஆரம்பிக்கவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இவன் நீதிபதிகளைபற்றி தவறான தகவல்கள் வெளியிடுவதற்கு காரணம் தனது உறவினராக பொலிசாக இருந்து கொலை வழக்கில் பிடிபட்டிருக்கும் மயூரன் என்பவனின் வழக்கை விசாரித்த நீதிபதிகளையே இவன் கடுமையான முறையில் விமர்சித்திருந்தான்.
அத்துடன் இவன் ஒருபோதும் திருந்தாத ஜன்மம் எனவும் இவனிடம் இரக்கம் காட்டி இவனை தப்ப உதவி செய்தால் இவன் மீண்டும் தனது திருவிளையாடல்களை நிச்சயம் காட்டுவான் எனவும் இவனால் பலதடவைகள் பாதிக்கப்பட்டவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இவன் இலங்கையில் மாத்திரமல்ல பல நாடுகளிலும் உள்ள பல தமிழர்களை மிகக் கேவலமான முறையில் செய்தி பிரசுரித்து அவர்களில் சிலர் நடைப்பிணமாக திரிவதற்கு காரணமானவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடமராட்சி வெல்லிக்கண்தோட்டம் துன்னாலை வடக்கு துன்னாலையைசச் சொந்த இடமாகக் கொண்ட ‘ஊத்தை சேது‘ என பொதுமக்களால் அழைக்கப்படும் நடராஜா சேதுரூபன் வெளியிட்ட போலி இணையத்தள செய்திகளால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இவன் நோர்வேயில் வசித்து வந்ததால் இவனை பொலிசார் கைது செய்யமுடியாமல் இருந்தது. இந் நிலையில் தனது மகளின் சாமத்தியவீட்டை கொண்டாட இவன் யாழ்ப்பாணம் வந்திருந்தான்.இவனுக்கு ஏற்கனவே நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இவன் யாழ் வந்திருந்த சமயத்தில் கடந்த 3ம் திகதி மகளின் சாமத்தியவீட்டைக் கொண்டாட முற்பட்ட வேளை பொலிசாருக்கு கிடைத்த இரகசியத்தகவலை அடுத்து 2ம் திகதி மாலை இவன் கைது செய்யப்பட்டான். கிளிநொச்சியைச் சேர்ந்த சிறிதரின்ன அடிவருடியான வட்டி ஜீவன் என்பவனிடம் இவன் கப்பம் பெற்றதாலேயே இவனுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இவன் யாழ்ப்பாணம் வருவதற்கு முன்னரே வட்டிஜீவனிடம் பெற்ற கப்பத்தொகையை மீற்றர் வட்டியில் திரும்ப அவனுக்கு கொடுத்து வழக்கை வாபஸ்பெறுமாறு கெஞ்சியதுடன் சிறிதரனிடம் விஜயகலா நேரடியாக பேசி இருவரையும் சமரசம் செய்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதன் பின்னர் வட்டி ஜீவன் தனது வழக்கை மீளப்பெற்றதால் கைது செய்யப்பட்ட ‘ஊத்தை சேது‘ பிணையில் விடுவிக்கப்பட்டான்.
வட்டி ஜீவன்
இவன் பிணையில் விடுதலையான சமயத்தில் ஏற்கனவே பருத்தித்துறை நீதிமன்றில் நிலுவையில் இருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இவனுக்கு பிடியாணை வழங்கப்பட்டிருந்தது. அந்த வழக்கை வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்திருந்தது. இவன் கிளிநொச்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான் என்பதை அறிந்த சட்டத்தரணிகள் மீண்டும் அந்த வழக்கில் ஊத்தைசேது மீது திறந்த பிடியாணையையும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாதவாறு தடையுத்தரவையும் பெற்றிருந்தனர்.
அதன் பின்னர் இவன் கடந்த புதன்கிழமையிலிருந்து பொலிசாரின் பார்வையிலிருந்து தலைமறைவாகினான். இந் நிலையில் இவனது மகளின் சாமத்தியவீடு கொக்குவில்பகுதியில் உள்ள செல்வாபாலஸ் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. தனது மகளின் சாமத்தியவீட்டுக்கு இவன் வருவான் என பொலிசார் சிவில் உடையில் அங்கு காத்திருந்தனர் என்றும் அத்துடன் இவனைக் கைது செய்வதற்காக ஜீப் வண்டி ஒன்றும் குறித்த பகுதிக்கு அண்மையில் நிறுத்தப்பட்டிருந்தது என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தனர். இந் நிலையில் அவன் மண்டபத்துக்குள் இல்லை என பொலிசார் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் இவனது மனைவி எந்தவித கவலையும் இல்லாமல் கப்பம் பெற்று உழைத்த பணத்தில் பெருமளவு நகைகளையும் போட்டுக் கொண்டு ஐஸ்கிறீம் குடித்துக் கொண்டு திரிந்துள்ளார்.
இதே வேளை மண்டபத்தில் ஊத்தை சேது காணப்படவில்லை என பலரும் தெரிவித்த போதும் மகளுக்கு ஆண்டாள் மாலை போடும் நேரத்தில் திடீரென இவன் வந்து குறைந்தது 5 நிமிடங்களுக்கு மேல் வீடியோவுக்கு காட்சி கொடுத்துவிட்டு ஓடி மறைந்ததாக அங்கிருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
இவனது மகளின் சாமத்தியவீட்டுக்கு ஐ.தே.க கட்சியின் யாழ்ப்பாணத்தைச் சேர்த மண்கும்பான் பிரபு, அலவாங்கு சசி என இவனால் தெரிவிக்கபடும் விஜயகலாவின் அடிவருடியான சசி மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சற்று நேரத்தில் மகளுக்கு கேக் வெட்டும் நிகழ்வும் நடக்கவுள்ளது. அதற்கு விஜயலா வருவார் என ஊத்தைசேதுவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனராம். விஜயகலா ஊத்தைசேதுவின் மனைவிக்கு தொடர்பு எடுத்து ‘ஒன்தவே‘ ஒன்தவே‘ என கூறியபடியுள்ளார் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
