Home புதினங்களின் சங்கமம் இலங்கை விமானப்படையின் ஹெலி விழுந்து நொருங்கியது!

இலங்கை விமானப்படையின் ஹெலி விழுந்து நொருங்கியது!

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்கு வானூர்தி ஒன்று இன்று காலை 8.17 மணியளவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஹிங்குரக்கொட முகாமில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட குறித்த உலங்கு வானூர்தி மாதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.

உலங்கு வானூர்தியின் விமானிகள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.