புதினங்களின் சங்கமம்

யாழ் நல்லூரைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி பலி!!

யாழ் நல்லூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி பலி ; அனுரதபுரத்தில் துயரம் !

அனுரதபுரம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் இன்றைய தினம் மாலை 6:00 மணியளவில் ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் ,

தனது கடமை முடிந்து ஆற்றில் குளிக்கச் சென்ற சமயம் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது ,

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலேந்திரன் முகுந்தன் வயது 29 என்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

சடலம் அனுரதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை அனுரதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Who