யாழ் அல்லைப்பிட்டியில் கரை ஒதுங்கிய தமிழக மீனவரின் உடல்!!!
தீவகம் அல்லப்பிட்டி, வெண்புறவிநகர் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இந்தச் சடலம் கண்டறியப்பட்டது.
கடந்த மாதம் 30ஆம் திகதி இந்திய, தமிழ்நாடு ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர் கார்சன் என்பவர் கடலில் தவறி வீழ்ந்தார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சடலம் அவருடையதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



