புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது..!

கிளிநொச்சிபொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வா நகர் பகுதியில் வாக்களிப்பு நிலையத்துக்கு அன்மித்த பகுதியில் சிறிய ரக கார் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களையும், அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

May be an image of 1 person, car and textMay be an image of knife