யாழில் நடந்த மிக்க கொடூரமான வேள்விக் காட்சிகள் இதோ!! நடத்தியவர்கள் யார்? (video)
யாழ்ப்பாணம் சித்தன்கேணியில் சித்தன்கேணி- பண்டத்தரிப்பு வீதியிலுள்ள மொட்டையன்புலம் ஒழுங்கையிலுள்ள வைரவர் கோவிலில் இன்று (10) பல ஆடுகளும் கோழிகளும் வெட்டிச்சாய்க்கப்பட்டன.
வைரவர் ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்று அருகிலுள்ள நாமகள் சனசமூக நிலையத்தின் முன்பாக இவை வெட்டிச்சாயக்கப்பட்டன. பின்னர்ஆலயத்தில் இவை ஏரம்போட்டு விற்கப்பட்டன.இதனை ஏராளமான சின்னஞ்சிறார்களும் கண்டுகளித்தனர். முதல்நாள் இரவுதுழுவதும் அந்தக்கிராமத்தையும் அயல்கிராம மாணவர்களையும் பரீட்சைக்கு படிக்கவிடாது பாரிய ஒலிப்பெட்டிகளில் மனித குலத்தினால் ஜீரணிக்கமுடியாத சத்தங்களை விடிய விடிய போட்டு மதுபோதையில் அட்டகாசம்செய்தார்கள்.இதனால் மாணவர்களும் பொதுமக்களும் கடும் மனவுளைச்சலுக்காளானார்கள்.
யாழ் மேல் நீதிமன்றத்தினால் வேள்விக்கு தடைபோட்டபோது கத்திகுளறிய முகநூல் கலாச்சார போராளிகளே ! உயர்நீதிமன்றில் வழக்குப்போட்ட சட்டத்தரணி கே.வி.எஸ் கணேசராஜா அவர்களே பின்தங்கிய சமூக மக்களை இப்போதும் அவ்வாறே வைத்திருக்கச்செய்வதா உங்கள் நோக்கம்.இவர்கள் நாகரிக மாற்றமடைவதை நீங்கள் விரும்பவில்லையா.
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுடன் இக்காட்சிகளை இனிவருங்காலங்களிலாவது இப்படிப்பட்ட ஆலயங்களுக்கு கட்டாயம் சென்று கண்டுகளிக்குமாறு மக்கள் அழைக்கிறார்கள்.