யாழில் வீடொன்றின் மீது 2வது தடவையாகவும் தாக்குதல் – பொலிஸார் மீது குற்றச்சாட்டு!
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தி வருவதாகவும் , பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாகவும் , பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் சனிக்கிழமை அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த பின்னர் அவற்றுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.
குறித்த வீட்டின் மீது கடந்த 08ஆம் திகதியும் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அது தொடர்பில் வீட்டாரால் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையே , நேற்றைய தினம் சனிக்கிழமையும் இரண்டாவது தடவையாக வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வீட்டாரால் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.