யாழ் மோட்டார் போக்குவரத்து பிரிவில் காலுக்கு மேல் கால் போட்டபடி கதிரையில் இருந்த அப்பாவியை பார்த்து கடுப்பான பீயோன்!!
யாழ் கச்சேரியில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போடப்பட்டிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்திருந்த அப்பாவி ஒருவனை அந்த திணைக்களத்தில் வேலை செய்யும் பீயோன் ஒருவன் அச்சுறுத்திய சம்பவம் ஓரிரு நாட்களின் முன் நடந்துள்ளது. போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகத்துக்குள் போடப்பட்டிருந்த கதிரை அல்லது உயரதிகாரிக்கு முன் போடப்பட்டிருந்த கதிரை என்றாலும் ஒரளவு நியாயம் இருக்கும். ஆனால் குறித்த அலுவலகத்தின் வெளிப்பகுதியில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்திருந்து காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்த ஒருவரை மிகக் கேவலமாக அச்சுறுத்தியுள்ளான் குறித்த பீயோன். புஸ்பா திரைப்படத்தில் ”இந்தக் காலும் என்னது… இந்தக்காலும் என்னது… என் காலுமேல நான் காலு போடுறன்.. ஓனர் மேலய போடுறன்” என்று அந்தப் பட கீறோ கூறிய மாதிரி அந்த அப்பாவி சொல்லாமல் காலை கீழே இறக்கி விட்டு அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்தார்.
வடக்கு மாகாணத்தில் மிக அதிக அளவு ஊழல் நடைபெறும் இடமாக மோட்டார் போக்குவர்தது பிரிவு திகழ்கின்றது. அதுவும் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக சாரதிப் பயிற்சிப்பாடசாலைகளில் சேரும் மாணவர்களை செய்முறைப் பரீட்சையில் சித்தியடைய வைப்பதற்காக ஒவ்வொரு பயிற்சிப்பாடசாலை பொறுப்பாளர்களும் குறித்த மோட்டார் போக்குவரத்து எக்சாமினேசர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை லஞ்சமாக வழக்கி வருகின்றார்கள். அத்துடன் அவர்களுக்கு ஹோட்டல்களில் றுாம் போட்டுக் கொடுத்து புட்டியும், குட்டியும் கொடுத்து சந்தோசப்படுத்தி வருகின்றார்கள். ஒவ்வொரு தடவையும் செய்முறைப்பரீட்சைக்கு வெளி மாவட்டங்களிலிருந்து வரும் எக்சாமினேசனர்கள் மீண்டும் வீடு செல்லும் போது ஆகக் குறைந்தது இரண்டு லட்சங்களுக்கு மேல் பயிற்சிப்பாடசாலை முதலாளிகளிடமிருந்து லஞ்சம் பெற்றுச் செல்வதாக தகவல்கள் வந்துள்ளன.
அதே போல் வாகனப் புத்தகங்கள் உரிமை மற்றாம் செய்யும் போதும் , வாகனங்களின் தரத்தை பரிசோதித்து அறிக்கைகள் கொடுக்கும் போதும் லஞ்சம் பெறும் செயற்பாடுகள் நடைபெற்று வருகி்ன்றன். இந் நிலையில் குறித்த போக்குவரத்து திணைக்களத்தில் கடமை புரியும் ஒரு சில ஊழியர்கள் தங்களை சொர்க்கத்திலிருந்து வந்த தேவர்களாக நினைக்கின்றார்கள். இவ்வாறானவர்களால் அரச துறைக்கே பாரிய இழுக்கு ஏற்படுகின்றது.
எங்களிடம் பிச்சை பெறும் பிச்சைக்காரன் எங்களையே அச்சுறுத்துவது போல் மக்களின் வரிப்பணத்தைப் பெற்று மக்களையே அதிகாரம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதன் ஒரு பிரதிபலிப்பே ஓரிரு நாட்களுக்கு முன் நடந்த சம்பவமாகும்.

