Home புதினங்களின் சங்கமம் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கணனிகள் மற்றும் கூரை மின் விளக்குகளை கொள்ளையிட்ட இராணுவ கோப்ரல் கைது!!

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கணனிகள் மற்றும் கூரை மின் விளக்குகளை கொள்ளையிட்ட இராணுவ கோப்ரல் கைது!!

தற்போது இராணுவத்தில் பொறுப்பின் கீழ் இருக்கும் மட்டக்களப்பு வாழைச்சேனை புணானை பிரதேசத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் ஆறு கணனிகள், 80 கூரை மின் விளக்குகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இராணுவ கோப்ரல் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இராணுவ மற்றும் பொலிஸ் காவலரண்களை கடந்து முச்சக்கர சென்றுக்கொண்டிருந்த நிலையில், வெலிகந்தை கடவத்மடு பொலிஸ் வீதி சோதனை சாவடியில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.7வது கெமுனு ஹோவா படைப்பிரிவின் நாவலடி இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் 35 வயதான இராணுவ கோப்ரலே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகளை நடத்தி வருவதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வாடகைக்கு அமர்த்திய முச்சக்கர வண்டியில் கொள்ளையிட்ட் பொருட்களை கந்துருவெல வரை எடுத்துச் சென்று அவற்றை பேருந்து மூலம் கொழும்புக்கு கொண்டு செல்ல சந்தேக நபர் திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.