புதினங்களின் சங்கமம்

கம்பெரலிய நிதியைச் சுருட்டிய சுன்னாகம் வேட்பாளர் பாலசிங்கம் சுரேஸ்குமார்

கம்பெரலிய அபிவிருத்தித் திட்டம் அமுலாகிக் கொண்டிருந்தபோது சுன்னாகம் பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு சிறுவர் பூங்கா கட்டுமானத்திற்கான செலவென பெறப்பட்ட 36 இலட்சம் ரூபாயில் 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான நிதியை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருந்துகொண்டு தமிழரசுக் கட்சியில் தற்பொழுது உள்ளூராட்சித் தேர்தலில் சுன்னாகம் நகர வட்டாரத்தில் போட்டியிடும் பாலசிங்கம் சுரேஸ்குமார் மோசடி செய்திருந்ததாக பல்வேறு தரப்புக்களாலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பூங்கா கட்டப்படுவதற்கு முன்பாக அந்த நெல் வயல் காணியில் 90 அடி தூரத்திற்கு 3 அடி அகலமும் 3 அடி உயரமும் கொண்ட சீமென்து அத்திவாரக் கட்டு சுன்னாகம் ஐயப்பன் கோவில் நிர்வாகத்தால் அமைக்கப்பட்டிருந்தது.

அதற்கு சுற்றுமுற்றும் நெல்வயல் காணிகளாகும்.

ஏற்கனவே கட்டப்பட்டு இருந்த அந்த சீமெந்தினாலான அத்திவாரக் கட்டின் மேல் பூங்காவுக்கான மதில் கட்டப்பட்டுள்ள
போதிலும் பூங்காவுக்கான செலவுமதிப்பீட்டுக்குள் அந்த 90 அடி நீளமான அத்தி வாரம் கட்டுவதற்கான செலவாக 9 இலட்சம் ரூபாய் உள்ளடக்கப்பட்டு, அத்திவாரமும் புதிதாக பூங்கா கட்டும் பொழுதே கட்டப்பட்டதாக பொய்யாகக் கணக்குக் காட்டப்பட்டு பாலசிங்கம் சுரேஸ்குமார் நிதி மோசடி செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சிறுவர்கள் விளையாடுவதற்கு ஸ்பிறிங் பெட் ஒன்றை உள்ளே கொண்டுவந்து பொருத்திவிட்டு திறப்புவிழா முடிந்து மூன்றாம் நாள் அதுவும் காணாமல் போய்விட்டது என்றும் பின்னர் அது பாலசிங்கம் சுரேஸ்குமார் வீட்டில் இருப்பதை அவதானிக்க முடிந்தது என்றும் அதுபற்றி பாலசிங்கம் சுரேஸ்குமாரிடம் விசாரித்த சிலருக்கு, அந்த ஸ்பிறிங்க் பெட் தனது செலவில் வாங்கப்பட்டதாக பாலசிங்கம் சுரேஸ்குமார் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் நிறைவடைந்தததும் கம்பரலிய நிதியில் இடம்பெற்ற சுன்னாகம் பூங்கா மோசடி தொடர்பாக பூரணமான விசாரணைகளை ஆரம்பிக்க ஏதுவாக உரிய அலுவலகங்களில் கோவைகள் பத்திரமாகப் பேணப்படவுள்ளன என்றும் நம்பகமாகத் தெரியவந்தது.

அதேவேளையில் விஜயகலாவின் நிதி ஒதுக்கீடுகள் மூலம் சுன்னாகம் பகுதியில் செய்யப்பட்ட முப்பதுக்கும் அதிகமான வீதிவேலைகளில் கட்சிக்காக நிதி கேட்டு வீதி வேலை ஒப்பந்த காரர்களிடம் பாலசிங்கம் சுரேஸ்குமார், ஒவ்வொரு வேலை மதிப்பீட்டின் 10% ஐ கொமிசனாகப் பெற்றுள்ளமையும் அதில் ஒரு சதம் கூட ஐ.தே.க வுக்கு சுரேஸ்குமாரினால் வழங்கப்
பட்டிருக்கவில்லை எனவும் தெரியவருகிறது.