மூன்று பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
கரவெட்டி வடக்கில் உள்ள வீடொன்றில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் இடம்பெற்றது என்று நெல்லியடி பொலிஸார் கூறினர்.
சம்பவத்தில் துன்னாலை ஆண்டாள் வளவைச் சேர்ந்த வி.விஜிதரன் (வயது-33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
வீட்டு கூரை வேலையில் ஈடுபட்டிருந்த போது தகரம் ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்தனர்.




