கசிப்புக் கடத்தல்காரர் மீது நடவடிக்கை எடுத்த பொலிஸ் சார்ஜன்டை வவுனியாவுக்கு மாற்றப் போவதாக திசைகாட்டி எம்பி அச்சுறுத்தல்!
கசிப்பு கடத்தல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டதால் ஆத்திரமடைந்த ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், வெலிப்பென்ன பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை கடுமையாகத் திட்டி, அவரை வவுனியாவுக்கு மாற்றுவதாக மிரட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்கு எதிராக விடுத்த அச்சுறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகம் குறித்து, சம்பந்தப்பட்ட சார்ஜன்ட், வெலிப்பென்ன பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

